02 September 2012

Facebook Status இல் ஒரு FUN...

Facebook இல் ஏதாவது Fun ஆக எதையாச்சும் போடலாமே என்று எண்ணியே மூளையை விடுபவர்கள் பலர். எனவே அவ்வாறானோருக்காக Facebook இல் Status Update செய்யும்போது கொஞ்சம் வித்தியாசமாக Fun ஆக எவ்வாறு Update செய்யலாம் என்று இப்பதிவினூடாகப் பார்ப்போம்.

கடந்தவொரு பதிவினூடாக நாம் Update செய்யும் Status ஐ எவ்வாறு நீலக்கலரில் Link போன்று காட்சியளிக்கச் செய்யலாம் என்று பார்த்தோம்.
இப்போ நாம் வழமையாக Update  செய்யும் Status ஐ எவ்வாறு தலைகீழ் எழுத்தாக அல்லது தலைகீழ் மாறுபட்ட சொற்களாக கொடுக்கலாம் என்று பார்ப்போம். கீழ் உள்ள படத்தை பார்க்கவும்.



இதற்காக இரண்டு தள முகவரிகள் கீழே தரப்பட்டுள்ளது.

இங்கு “Type your text here...” என்ற பகுதியினுள் நீங்கள் கொடுக்கப் போகும் Status ஐ கொடுக்க கீழே உள்ள பகுதியினுள் அது தலைகீழாக தோன்றும். இப்போ அதனை Copy செய்து Status பகுதியினுள் Paste செய்யவேண்டியதுதான்.

இதில் சற்று வசதி அதிகம் தரப்பட்டுள்ளது. அதாவது நாம் கொடுக்கும் எழுத்துக்கள் தலைகீழாக தோன்றுவது மட்டுமல்லாது இடம்மாறியும் தோன்றச் செய்யலாம்.
உதாரணங்கள் கீழே தரப்பட்டுள்ளது.
                                  01
02
03

எழுத்தைச் சுற்றி கீழ் உள்ளது போன்று வட்டமிடவேண்டின் இத் தளத்தின் இடது பக்க மேல் மூலையில் உள்ள  “ Bubble  BallText” என்பதைக் கொடுக்கவும்.

முயற்சி செய்து பாருங்களேன்.....

1 comment:

  1. பதிவை இணைக்க மட்டும் முகநூல் பக்கம் செல்வதுண்டு... இருந்தாலும் செய்து பார்க்கிறேன்... ஒரு Fun தானே...!

    ReplyDelete