06 February 2013

YouTube வீடியோக்களை மென்பொருள் எதுவுமின்றி தரவிறக்க.

நாம் YouTube இலே பல்வேறு வீடியோக்களை பார்வையிடுகின்றோம். இவற்றை தரவிறக்குவதற்காக பல்வேறு மென்பொருட்களை பயன்படுத்தியிருப்போம். ஆனால் இப்பதிவினூடாக மென்பொருட்கள் எதுவுமின்றி எவ்வாறு விரும்பிய வடிவங்களில் வீடியோக்களை தரவிறக்கிக் கொள்வது என்று பார்ப்போம்.

இதுபோன்ற இன்னுமோர் பதிவினைப் படிக்க இங்கே கிளிக் பண்ணவும்.

முதலில் உங்களுக்கு விரும்பிய வீடியோக்குரிய URL முழுவதையும் கீழ் உள்ள படத்தில் காட்டியவாறு Copy செய்துகொள்ளுங்கள்.



இப்போ Browser இல் புதிய TAB இல் நீங்கள் Copy செய்த URLPaste செய்துகொள்ளுங்கள்.

இப்போ நீங்கள் Paste செய்த URL ஐ கீழ் காட்டப்பட்டவாறு “ www. ” இற்குப் பதிலாக “  ss ” என்று மாற்றிய பின்னர் Enter செய்யவும் அல்லது பக்கத்தை Refresh செய்துகொள்ளவும்.



இப்போ உங்களுக்கு புதிய பக்கம் திறக்கும். இதிலே கீழ் காட்டியவாறு வட்டமிடப்பட்டுள்ளதில் உங்களுக்கு விரும்பிய வீடியோ வடிவத்தை தெரிவுசெய்து தரவிறக்கிக் கொள்ளவேண்டியதுதான்......


5 comments:

  1. புதிய விடயங்களை அறியத்தருவதற்கு நன்றிகள் - ரமணன் நெடுந்தீவு

    ReplyDelete
  2. appede ethuvumee varuthu ellajee
    appede oru page open ahkuthee ellaje y?

    ReplyDelete
  3. Kandiah.SAYALOLIPAVANMay 31, 2013 at 2:12 PM

    This is very useful information, so I've shared this in my FaceBook time line . Thank you very much.

    ReplyDelete