.

ஒரு Browser இல் இருந்து ஒரே நேரத்தில் பல Google கணக்குகளை கையாள....

நாம் பொதுவாக ஒரு Browser இல் ஒருசமயத்தில் ஒரு கூகிள் கணக்கினையே கையாள்வதுண்டு. இன்னொரு கணக்கை கையாள்வதென்றால் அதனை Sign out செய்தபின்பே மற்றைய கணக்கை திறப்பதுண்டு. அல்லது வேறொரு Browser ஐத் திறந்து அதனைப் பயன்படுத்துவதுண்டு.

ஆனால் இவ்வாறு இல்லாமல் ஒரு Browser இலேயே ஒரே சமயத்தில் எவ்வாறு பல கூகிள் கணக்குகளை கையாள்வது என்பது பற்றிப் பார்ப்போம். பலருக்கு இதுபற்றித் தெரிந்திருந்தாலும் தெரியாதவர்களுக்காய் இப்பதிவு இடப்படுகின்றது.

அதாவது இதனை இரண்டு வழிகளில் மேற்கொள்ளலாம்.

நீங்கள் ஒரு கணக்கை பயன்படுத்திக்கொண்டு இருக்கும் சந்தர்ப்பத்தில் இன்னொரு கணக்கையும் கையாள வேண்டியேற்படின் அதற்காக " Shft + Ctrl + N " என்பதைக் கொடுங்கள். இப்போ Browser இன் புதிய விண்டோ ஒன்று திறக்கும். இதிலே நீங்கள் பயன்படுத்த இருக்கும் மற்றைய கணக்கை திறந்து பயன்படுத்திக்கொள்ள வேண்டியதுதான்.
அல்லது,

உங்கள் ஜிமெயில் கணக்கின் Sign out செய்யும் பகுதிக்குச் செல்லுங்கள்.


இங்கே "Switch Account" என்பதை கிளிக் செய்யுங்கள். இப்போ தோன்றும் பகுதியில் " Sign in to Another Account " என்று காணப்படும்.


இதனை கிளிக் செய்யுங்கள். இப்போ தோன்றும் புதிய Tap இல் உங்கள் மற்றைய கணக்கினைத் திறந்து பயன்படுத்திக் கொள்ளவேண்டியதுதான்.

இதில் Browser இன் ஒரு விண்டோவிலேயே பல Tap களில் வெவ்வேறு கூகிள் கணக்குகளை ஒரேநேரத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பயன்படுத்திப் பாருங்களேன்......

3 Response to "ஒரு Browser இல் இருந்து ஒரே நேரத்தில் பல Google கணக்குகளை கையாள...."

 1. ronald says:
  September 8, 2011 at 6:08 PM

  நல்ல உபயோகமான பதிவு,

 2. MARHUM MUSLIM says:
  September 10, 2011 at 11:39 AM

  நண்பா...நல்ல செய்தி....
  http://marhum-muslim.blogspot.com/என்பக்கத்திற்க்கும் வாங்களேன்

 3. Anonymous Says:
  September 24, 2011 at 5:55 AM

  yes this is a nice information,
  and see myblog :-
  www.emilsir.blogspot.com
  emilsir.

Post a Comment

பிரபல இடுக்கைகள்