.

வேறிடத்தில் பயன்படுத்திய Gmail கணக்கை Sign Out செய்ய மறந்துவிட்டீர்களா?

   Gmail ஆனது பலராலும் பயன்படுத்தும் Google இன் ஒரு மின்னஞ்சல் சேவையாகும். இதனை நாம் பாதுகாப்பான முறையில் கையாளவேண்டும்.
 இலகுவான கடவுட்சொல் வைத்திருந்தாலோ அல்லது பிற இடங்களில் பயன்படுத்திவிட்டு தவறுதலாக Sign Out கொடுக்க மறந்தாலோ அல்லது திடீரென ஏற்படும் மின்தடையால் Sign Out கொடுக்க முடியாமல் போதல் போன்றவற்றால் மற்றையவர்கள் உங்கள் கணக்கை திருடவோ அல்லது சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தவோ கூடும்.

ஒரு Gmail கணக்கானது ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கணணிகளிலோ அல்லது உலாவிகளிலோ கையாள முடியும். பலரும் பயன்படுத்தும் Net cafe போன்றவற்றில் இவ்வாறு Sign Out கொடுக்கப்படாத பட்சத்தில் அதனை எவ்வாறு வேறு கணணியிலிருந்து Sign Out செய்வது என்று பார்ப்போம்...

முதலில் உங்கள் ஜிமெயில் கணக்கினுள் நுழைந்துகொள்ளுங்கள் . இப்போ முகப்புப் பக்கத்தின் வலப்பக்க கீழ் மூலையில் படத்தில் காட்டியவாறு "Details " என்று காணப்படும்.





 இதனை கிளிக் செய்து தோன்றும் புதிய விண்டோவில் " Sign Out all other sessions" என்பதனை கிளிக் செய்யவும். இப்போ நீங்கள் வேறிடத்தில் பயன்படுத்திய ஜிமெயில் கணக்குகள் Sign Out செய்யப்படாதிருந்தால் அனைத்தும் Sign Out ஆகிவிடும்.


2 Response to "வேறிடத்தில் பயன்படுத்திய Gmail கணக்கை Sign Out செய்ய மறந்துவிட்டீர்களா?"

  1. மரணத்தின் வாயிலை நோக்கி! says:
    October 20, 2012 at 12:38 PM

    தோழா, மிகப் பயனுள்ள பதிவு! இதுவரை நான் படித்த தகவல்கள் எல்லாம் வேறு தோழர்கள் வேறு வடிவில் பதிந்திருந்தார்கள். ஆனால், இதை நான் இப்போது தான் முதல் முதலில் படிக்கிறேன். மிக்க நன்றி! நான் இதை என் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

  2. imman says:
    May 30, 2013 at 4:51 PM

    பயனுல்ல பதிவு. நன்றி

Post a Comment

alternative description of the image

பிரபல இடுக்கைகள்