.

Showing posts with label Software. Show all posts
Showing posts with label Software. Show all posts

YouTube வீடியோக்களை மென்பொருள் எதுவுமின்றி தரவிறக்க.

நாம் YouTube இலே பல்வேறு வீடியோக்களை பார்வையிடுகின்றோம். இவற்றை தரவிறக்குவதற்காக பல்வேறு மென்பொருட்களை பயன்படுத்தியிருப்போம். ஆனால் இப்பதிவினூடாக மென்பொருட்கள் எதுவுமின்றி எவ்வாறு விரும்பிய வடிவங்களில் வீடியோக்களை தரவிறக்கிக் கொள்வது என்று பார்ப்போம்.

அனைத்து User Accounts களையும் தன்னிச்சையாகவே CCleaner மூலம் சுத்தஞ்செய்ய..

நீங்கள் கணணியைப் பயன்படுத்தும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தேவையற்ற ஆவணங்கள் கணணியில் தேக்கமடைகின்றன. இவை நாளடைவில் கணணியின் வேகத்தை குறைக்கும். எனவே இதனை அழிப்பதற்காக வினைத்திறனான மென்பொருளாக நாம் CCleaner ஐப் பயன்படுத்துகின்றோம்.

Windows 8 Bootable USB Drive ஐ உருவாக்கல்.



Windows 7, Windows 8 இயங்குதளங்களானது பொதுவாக DVD வடிவிலேயே கிடைப்பதுண்டு. கணணியிலே இயங்குதளத்தை நிறுவ வேண்டிய சந்தர்ப்பத்தில் அக் கணணியிலே DVD Drive இல்லாத சந்தர்ப்பங்களில் எவ்வாறு Windows 8USB Drive மூலமாகத் Bootable USB Drive ஆகத் தயாரிக்கலாம் என்று இப் பதிவினூடாகப் பார்ப்போம்.

Facebook இல் வீடியோ Upload செய்வதில் பிரச்சனையா...?


Facebook அல்லது YouTube போன்றவற்றில் நமது வீடியோவை தரவேற்றும்போது அதன் அதிக கொள்ளளவு காரணமாக மிகுந்த சிரமப்படுவதுண்டு. இதற்காக பல மென்பொருட்களை நாம் நாடுவதுண்டு. சிலவேளைகளில் சிரமம் காரணமாக பதிவேற்றுவதை தவிர்ப்பதுமுண்டு. எல்லாவற்றுக்கும் ஓர் எளிய தீர்வாக இப்பதிவு அமையுமென எதிர்பார்க்கின்றேன்.

மென்பொருள் இல்லாமல் கைத்தொலைபேசியில் Folder ஐ மறைக்க


உங்கள் கைத்தொலைபேசியில் உள்ள சில படங்கள் அல்லது வேறு ஏதும் ஆவணங்கள் போன்றவற்றை தேவையில்லாதவர்கள் பார்ப்பதை தடுக்கவேண்டுமென எண்ணுகின்றீர்களா? மென்பொருட்கள் எதுவுமின்றி மிக இலகுவான வழி உங்கள் தேடலுக்காக இப்பதிவினூடாக....
இதற்காக நீங்கள் JAVA Applications உள்ள எந்தவொரு கைத்தொலைபேசியையும் பயன்படுத்தலாம்.
கீழ் உள்ள படிமுறையைப் பின்பற்றவும்.

ஒரு கிளிக்கில் எல்லா உலாவிகளினது History Files மற்றும் Temporary Files முழுவதையும் அழிக்க.

பெரும்பாலான இணையப் பாவனையாளர்கள் இணையப் பயன்பாட்டிற்காக பல உலாவிகளைப்(Browsers) பயன்படுத்துவதுண்டு. இவை அனைத்தினதும் பயன்பாட்டினால் பெருமளவான Temporary Files, Cookies மற்றும் History Files ஆகியவை தேங்குகின்றன. இதனால் வன்தட்டில் இடம் குறைவதுடன் கணணியின் வேகத்தையும் குறைக்கின்றது. இவை அனைத்தையும் ஒரே கிளிக்கில் எவ்வாறு அழிப்பது என்று இப்போ பார்ப்போம்.

உங்களுக்கு விரும்பிய Ring Tone பலவழிகளில் வடிவமைக்க-2

அலசல்கள்1000 இன் கடந்த பதிப்பொன்றிலே உங்களுக்கு விரும்பிய Ring Toneகளை வடிவமைக்க பலவழிகளைப் பற்றிப் பார்த்தோம். இப் பதிவினூடாக அதன் தொடர்ச்சியாக இன்னோர் வழி ஒன்று பற்றிப் பார்ப்போம்.


போட்டோக்களின் கொள்ளளவைக் குறைப்பதற்கு..


நாம் கமராக்களில் எடுக்கும் புகைப்படங்களின் அளவானது பெரும்பாலான வேளைகளில் அதிகமாகவே காணப்படும். இதனால் அப் படங்களை நாம் பென்ட்ரைவில் எடுத்துச்செல்ல அதன் கொள்ளளவு போதுமானதாக இருக்காது. அதேநேரம் கணணியில் சேமித்து வைப்பதாயின் வன்தட்டிலும் அதிக இடத்தைப் பிடிக்கும்.


FaceBook, Twitter போன்றவற்றில் ஆங்கிலத்தில் பிழையின்றி பதிவிட அருமையான அகராதி.


பொதுவாக நாம் ஆங்கிலத்தில் எழுத்துக்களை Type செய்யும்போது சிலசமயங்களில் எழுத்துப் பிழை விடுவதுண்டு. அல்லது எழுத்து தெரியாமல் சொல்லொன்றினை Type செய்வதற்காக Dictionary ஐ நாடுவதுண்டு. Microsoft Word இல் என்றால் பிழையாக Type செய்தால் கீழ் கோடிடுவதன்மூலம் உடனடியாக பிழையை கண்டறிந்து திருத்தியும் விடலாம். இதேபோல் நமது தொலைபேசிகளிலும் dictionary ஐப் பயன்படுத்தும் வசதி உண்டு.
ஆனால் Facebook, Twitter, Email போன்றவற்றிலோ அல்லது சாதாரணமாகப் பயன்படுத்தும் Text Editors களிலோ [Notepad, WordPad ect… ] இந்த வசதி இல்லை. எனவே நாம் சிலசமயம் சொல் தெரியாமல் கஷ்டப்படுவதுமுண்டு.

Select default operating system for startup


எமது கணனிகளில் சில தேவைகளின் நிமித்தம் நாம் ஒன்றுக்கு மேற்பட்ட இயங்குதளங்களை நிறுவிப் பயன்படுத்துவதுண்டு. இவ்வாறான சந்தர்ப்பங்களில் கணணியை இயக்க ஆரம்பிக்கும்போது வேறு இயங்குதளங்கள் இயங்க ஆரம்பித்துவிடும்.
அதாவது Windows OS பயன்படுத்தும் நீங்கள் வேறு சில தேவை கருதி Linux OS நிறுவியிருப்பீர்கள். மீண்டும் கணணியை இயக்கும்வேளை எந்த இயங்குதளத்தைப் பயன்படுத்தப் போகின்றீர்கள் என்பதை தெரிவுசெய்யவேண்டும். ஆனால், தெரிவுசெய்வதை மறந்துபோய் இருந்தீர்களானால் மற்றைய இயங்குதளம் இயங்க ஆரம்பித்துவிடும். எனவே மீண்டும் கணணியை Resert செய்யவேண்டி ஏற்படும்.

All- in -One Software ஐ இலவசமாக பெற.


All- in -One  என்று பொதுவாக ஒன்றிலே பல தொழிற்பாடுகளை செய்யக்கூடிய இலத்திரனியற் சாதனங்களைத்தானே கேள்விப்பட்டோம். இதென்னவென்று கூட யோசிக்கலாம்.
ஆம். பொதுவாக கணனியில் இயங்குதளத்தை நிறுவியபின்னர் எமக்கு தேவைப்படுவது மென்பொருட்கள் அடங்கிய சிடியே. இதனை நாம் கடையிலிருந்தோ அல்லது நண்பர்களிடமிருந்தோ அல்லது அடிக்கடி இயங்குதளத்தை நிறுவுபவர்கள் எனின் சேகரித்தோ கூட வைத்திருக்கலாம். ஆனால் உங்களிடம் அவ்வாறு மென்பொருட்கள் ஏதும் போதியளவு இல்லாதவேளை இயங்குதளத்தை அழித்து மீண்டும் நிறுவவேண்டி ஏற்படும் சந்தர்ப்பத்தில் CD க்காக அலையவேண்டியதில்லை.

கணனியில் நிறுவியுள்ள அனைத்து Driver களையும் BACK UP எடுத்துக்கொள்ள.


அலசல்கள்1000  இன் கடந்தவொரு பதிப்பிலே விண்டோஸ் இயங்குதளம் நிறுவவேண்டிய தேவையேற்படும்போது Driver Cd இல்லாதுவிட்டால் எவ்வாறு அதனை இணையத்தளத்திலிருந்து பெற்றுக்கொள்வது என்பதுபற்றி அலசியிருந்தோம். இதனை படிக்க இங்கு சொடுக்கவும்.
ஆனால், இப்போ அதனையும்விட சற்று முன்னகர்ந்து; ஒவ்வொரு Driver களையும் தரவிறக்கிக் கொள்வதற்குப் பதிலாக எமது கணனியில் நிறுவப்பட்டிருக்கும் அனைத்து Driver களையும்  அப்படியே எவ்வாறு BACK UP எடுத்து மீண்டும் நிறுவிக்கொள்வது என்பது பற்றி பார்ப்போம்.


Team Viewer - உங்கள் கணணியை தொலைவிலுள்ள இன்னொருவர் கணணியிலிருந்து இயக்க.



நாம் கணணியை நீண்ட காலம் பயன்படுத்தி வந்தாலும் அதில் ஏற்படும் எல்லாப் பிழைகளையும் (வன்பொருள் அல்லது மென்பொருள் [Hardware/ Software] ரீதியான) எம்மால் சீர்செய்து கொள்ள முடிவதில்லை. இவ்வாறான வேளையிலேயே நாம் மற்றவரை நாடுவதுண்டு. அதிலும் சிலருக்கு பொதுவாக பெண்களுக்கு தமது நண்பர்களாயிருந்தால்  வீட்டில் அழைத்து அப் பிரச்சனையை சரிசெய்வது என்பது சற்று கடினமானதே. அதேவேளை தெரிந்த உறவினர் இருப்பினும் வேறு நாட்டில் வசித்தால் எப்படி அப் பிரச்சனையை தீர்ப்பது என்று கவலைப்படுவதுமுண்டு.

ஆனால் இப்போ இணைய வசதி இல்லாதவர்களின் வீடே இல்லையெனலாம். அப்படியிருக்க எமக்கேன் இவ்வாறான கவலை..? இருக்கவே இருக்கின்றது ரீம் வியுவர்(TeamViewer) எனும் மென்பொருள்.


ORACLE DATABASE மற்றும் Apache server, PHP, MySQL போன்றவற்றின் நிறுவுகை


கடந்த பதிப்பில் எவ்வாறு WAMP SERVER ஆனது கணனியில் நிறுவிக் கொள்வது (Install) என்பது பற்றிப் பார்த்தோம். இப்போ ORACLE DATABASEOracle 10g Database Administrator: Impl மற்றும் Apache server, PHP, MySQL போன்றவை எவ்வாறு நிறுவிக் கொள்வது பற்றி நான் அலசிப் பெற்றுக்கொண்ட விடயங்களை தங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.... இங்கு பல படிமுறைகளில் படங்களுடன் தரப்பட்டுள்ளது. நிறுவுவது மிகவும் இலகுவானது. அவற்றின் நிறுவுகை பற்றிய படிமுறைகளை தெரிந்துகொள்ள கீழ் உள்ள அவற்றுக்குரிய செருகியை அழுத்தவும். அது நான் அலசிய அத் தளத்துக்கு உங்களை அழைத்துச் செல்லும். படித்துப் பயன்பெறுக...








WAMP SERVER நிறுவுகை. (WAMP – Windows Apachi MySQL PHP )



 WAMP server ஆனது எவ்வாறு இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கணனியில் நிறுவிப் பயன்படுத்துவது என்பது பற்றியதே இப்பதிவாகும். இவ் அலசல்கள்1000 இன் WAMP server பற்றிய அலசலானது தமிழுக்கு மாற்றப்படாமல் ஆங்கிலத்திலேயே தரபட்டுள்ளது. காரணம், நண்பர்கள் அனைவருக்கும் இலகுவில் புரியக்கூடிய வகையில் எளிமையான எளிமையான வசனத்தில் உள்ளமையாகும்.




Windows Sever 2003 Installation




இணையமதில் அலசிப் பெற்ற விடையங்களை “யான் பெற்ற இன்பம் வையகமும் பெறுக” எனும் வாக்குக்கு இணங்க நண்பர்களுக்காக இட்டு வருகின்றேன். அந்தவகையில் சேவர்கள் நிறுவுகை பற்றிய நண்பரின் தேவைக்காக நான் இணையத்தில் அலசியவேளை கிடைத்தவற்றை வெளியிடுகின்றேன். இதுபற்றி ஆக்கபூர்வமான கருத்துக்கள், இடுக்கைகள் இருப்பின் எனது முயற்சிக்கும் கூடவே நண்பர்களின் முயற்சிக்கும் ஒரு ஏணிப்படியாக தாங்கள் அமையுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
Windows Server 2003 நிறுவுகையானது(Installation)  Windows XP இன் நிறுவுகை(Installation)   போன்றதே. இதில் ஒருசில மேலதிக செய்கைகளை செய்தால் போதுமானது. Windows XP பற்றிய பதிவொன்று கடந்த வாரம் வெளியிடப்பட்டிருந்தது. பற்றிய பதிவுக்குச் செல்ல இங்கு கிளிக் பண்ணவும்.


விண்டோஸ் மீடியா பிளேயரில்(Windows Media Player) அனைத்து வகையான Format வீடியோக்களை காண்பதற்கு...


நாம் சாதாரணமாக பாடல் கேட்பதற்காக பயன்படுத்தும் விண்டோஸ் மீடியா பிளேயரானது(Windows Media Player) கணனியில் விண்டோஸ் இயங்குதளம்(Operating System) நிறுவப்படும்போது அவ் இயங்குதளத்துடன் சேர்த்தே( DEFAULTஆக) நிறுவப்படுகின்றது. இந்த மீடியா பிளேயரில் சில வகையான (MKV,Divx,Avi,MP4) கோப்புக்களில்(Formats)  உள்ள பாடல்களை நாம் கேட்க முடிவதில்லை. அவ்வாறான வேளைகளில் வேறு பிளேயர்களுக்காக அலையும் சந்தர்ப்பங்கள் நமக்கு ஏற்பட்டதுண்டு. அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் எனது அலசல்களில் அகப்பட்டதை தங்களுக்கும் பகிர்ந்து கொள்கின்றேன்.


கணனியில் USB DRIVE மூலம் Windows7 நிறுவுதல்

தற்போதைய காலத்தில் பென்டிறைவும்(PenDrive) புரோட்பாண்டும்(BroadBand) இல்லாதவர்களின் வீடே இல்லை எனலாம். எனவே பொதுவாக கணனியில் நிறுவத் தேவையான மென்பொருட்களில் பெரும்பாலானவை இணையம் மூலமாகவே தரவிறக்கப்(Download)படுகின்றது. இதுபோலவே Windows7 இயங்குதளத்தையும் தரவிரக்கக் கூடியதாக உள்ளது. இவ்வேளையில் DVD ROM இல்லாத கணணிகளுக்கு இம்முறையே பெரிதும் பயன்படுகின்றது..

கணனியில் Windows XP இயங்குதளத்தை நிறுவுதல்

சாதரணமாக ஒரு கணணி இயங்கும் வேளையில் அதன் BIOS இல் உள்ள BIOS SETUP இல் FIRST BOOT DEVICE ஆக Hard Disk ஐ தெரிவு செய்திருத்தல் வேண்டும். ஏனெனில் சாதாரணமாக கணணி ஒன்று இயங்குகின்றவேளை கணணி இயங்குவதற்குத் தேவையான இயங்குதளமானது(Operating System) அதன் வன்தட்டில் (Hard Disk) இருந்தே தொழிற்படுகின்றது.
இயங்குதளமானது(Operating System) கணனியில் பதியப்படும் போது பொதுவாக அது CD / DVD இல் இருந்தே பதியப்படுகின்றது. எனவே நாம் முதலில் BIOS இல் உள்ள BIOS SETUP இற்குச் சென்று அங்கு FIRST BOOT DEVICE ஆக CD/DVD ROM ஐத் தெரிவுசெய்ய வேண்டும்.

இதற்காக நீங்கள் செய்யவேண்டியது இதுதான்..... முதலில் உங்கள் கணணியை Restart செய்ய வேண்டும். இப்போது கணணி Open பண்ணும்போது குறுகிய கணத்தினுள் சில செய்திகள் வந்து செல்லும். அப்போது உன்னிப்பாக அவதானியுங்கள்,,,   “<BIOS SETUP> DEL “  என்ற செய்தி அல்லது அதற்கு ஒப்பான செய்தி தோன்றும்.(இதில் “DEL”  Key இற்குப் பதிலாக F2, ESC,F10 போன்றவையும் காணப்படலாம். Mother Board இற்கு ஏற்ப இவை மாறுபடும்) இவ்வாறு செய்தி தோன்றும் அக் கணத்தில் குறிப்பிட்ட அக் கீயை ஓரிரு முறை அழுத்துதல் வேண்டும். இப்போது இக் கட்டளையானது BIOS SETUP இற்குள் அழைத்துச் செல்லும். சிலவேளைகளில் கீயை அழுத்த தாமதமாகின் ஏற்கனவே முதலில் உள்ள Operating System ஆனது இயங்க ஆரம்பித்துவிடும். எனவே அப்படி ஏற்படின் மீண்டும் கணணியை Restart செய்து மீண்டும் தொடர வேண்டும்.


மைக்ரோசொப்ட் விண்டோவின் பரிணாம வளர்ச்சிப் படிகள். (Evolution of Microsoft Windows) - 1985 – 2012

நவம்பர் மாதம் 10ம் திகதி 1983ம் ஆண்டு நியூயோக் நகரத்திலே Microsoft இன் ஸ்தாபகர்களான Paul Allen, Bill Gates இனால் அவர்களது நிறுவனம் பற்றி முதன்முதலாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப் பட்டது.
1985 ம் ஆண்டு முதன்முதலாக Microsoft இன் கூர்ப்பின் முதற்படியாக Windows 1.01 எனும் operating system அறிமுகப் படுத்தப்பட்டு தொடர்ந்து பல படிகளைத் தாண்டி தற்போது Windows 7 எனும் operating system அனைவராலும் பயன்படுத்த ஆரம்பித்திருக்கும் வேளையில் கூர்ப்பின் அடுத்த கட்டமாக Windows 8 எனும் operating system  உருவாக்கப்பட்டு வருக்கின்றது.
அந்தவகையில் இணையமூடு இதுபற்றி அலசியவேளை நான் அறிந்த விடயங்களை நண்பர்களின் அலசல்களிலும் பகிரவிடுகின்றேன்….

alternative description of the image

பிரபல இடுக்கைகள்