.

Showing posts with label windows 7. Show all posts
Showing posts with label windows 7. Show all posts

Right Click இன்மூலம் நேரத்தை மிச்சப்படுத்த...?!!!?

Command Prompt (CMD) ஐப் பயன்படுத்தும்போது அடிக்கடி Path இனை மாற்றவேண்டிய சந்தர்ப்பம் ஏற்படும். எனவே CMD ஐப் பயன்படுத்தும் தேவையுடையோருக்காக Windows 7 இலே சுலபமாகவும் நேரத்தை மிச்சப்படுத்தக் கூடிய விதமாகவும் Right Click Menu இல் ஓர் மேலதிக வசதியொன்று உள்ளது. இதனை எவ்வாறு மேற்கொள்ளலாம் என்று இப் பதிவினூடாகப் பார்ப்போம்.


Windows7 இன் Taskbarஐ Vista வடிவுக்கு மாற்றுவது எப்படி?

Task bar என்பது பொதுவாக கணணியிலே கீழ்ப்பக்கத்தில் காணப்படும் ஒரு பட்டியாகும். இது ஒவ்வொரு வகை இயங்குதளத்துக்கும் வடிவில் சிறிய வேறுபாட்டைக் கொண்டிருக்கும். ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வடிவில் அதிக விருப்பத்தைக் கொண்டிருப்பர்.

நீங்கள் விண்டோஸ்7 பாவனையாளர் எனின் Task bar கீழ் உள்ளது போன்று காணப்படும்.

விண்டோஸ் 7 இல் Wallpapers களை எழுந்தமானமாக மாறச் செய்ய.


கணணியில் உள்ள Wallpaper ஐ நாம் நமக்கு விரும்பியவாறு போட்டுக்கொள்ளலாம். அதிலும் குறிப்பாக சிலர் ஒரே படத்தை தொடர்ந்து பார்த்து சலிப்புத் தட்டுவதால் அடிக்கடி மாற்றுவதுமுண்டு.
அப்படி அடிக்கடி மாற்றாமல் தன்னிச்சையாகவே படங்களை எவ்வாறு மாற்றமடையச் செய்யலாமென்று இப்பதிவினூடாகப் பார்ப்போம்.

விண்டோஸ் 7 இல் மறைந்துள்ள அனைத்து THEMES களையும் செயற்படுத்திப் பயன்படுத்திக்கொள்ள..

விண்டோஸ்7 இல் வேறுபட்ட Themes களை மாற்றிப் பயன்படுத்துவதற்காக நாம் Desktop இன் ஓரிடத்தில் வைத்து Right-Click செய்து தோன்றும் விண்டோவின் கடைசியில் உள்ள “Personalize “ என்பதை தெரிவுசெய்யும்போது தோன்றும் விண்டோவில் உள்ள Themes களையே பயன்படுத்துவதுண்டு.
ஆனால் இவ் விண்டோஸ்7  இயங்குதளத்துடன் மேலும் பல நாடுகளுக்குரிய Themes கள் மறைக்கப்பட்டு இருக்கும். அவற்றையும் நாம் எப்படி எடுத்து பயன்படுத்திக் கொள்வது என்பதே இப்பதிவின் நோக்கமாகும்.

விண்டோஸ் 8 இல் உள்ள முகப்புப் பக்கத்தை விண்டோஸ் 7 போல் மாற்ற.

விண்டோஸ் 8  இல் உள்ள Metro-Style user Interface ஆனது  tablet PC பாவனையாளர்களுக்கே மிகவும் பொருத்தமானது. நீங்கள் ஒரு வீட்டுக்கணணி பாவனையாளர் எனின் இது உங்களுக்கு பாவனைக்கு கடினமானதாக இருக்கலாம். எனவே நன்றாகப் பழகிய விண்டோஸ் 7 Start Menu தோற்றம் போல் எவ்வாறு மாற்றலாம் என்பது பற்றியதே இப்பதிவாகும்.

விண்டோஸ் 7 இல் USB Drive (USB Port) ஐ மறைப்பதற்கு...


தேவையற்ற PenDrive களின் அதிக பாவனையால் வைரஸ் தாக்கம், மற்றும் எமது கணணியில் உள்ள தகவல்களை ஏனையோர் PenDrive மூலம் களவாடாமல் இருக்க போன்ற பல்வேறு தேவைகளுக்காக நாம் கணணியில் உள்ள USB Port ஐ மறைக்க எண்ணியிருப்போம். ஆனால் எப்படி இதைச் செய்யலாம் என்றுதானே முடியவில்லை என்றும் வருத்தப்பட்டிருப்போம். அதற்க்கு தீர்வாக இப் பதிவு அமையுமென எதிர்பார்க்கின்றேன்.


கணனியில் USB DRIVE மூலம் Windows7 நிறுவுதல்

தற்போதைய காலத்தில் பென்டிறைவும்(PenDrive) புரோட்பாண்டும்(BroadBand) இல்லாதவர்களின் வீடே இல்லை எனலாம். எனவே பொதுவாக கணனியில் நிறுவத் தேவையான மென்பொருட்களில் பெரும்பாலானவை இணையம் மூலமாகவே தரவிறக்கப்(Download)படுகின்றது. இதுபோலவே Windows7 இயங்குதளத்தையும் தரவிரக்கக் கூடியதாக உள்ளது. இவ்வேளையில் DVD ROM இல்லாத கணணிகளுக்கு இம்முறையே பெரிதும் பயன்படுகின்றது..

Windows 7 பற்றிய சில தீர்வுகள்



தற்போது பலரும் விண்டோஸ் எக்ஸ்பி இல் இருந்து விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு மாறி வருகின்றனர். விண்டோஸ் 7 சிஸ்டத்தில், பல சின்னஞ்சிறு வசதிகள் நேரடியாக அறிந்து கொள்ள முடியாத வகையில் தரப்பட்டுள்ளன. இவை நம்முடைய பல பிரச்னைகளுக்குத் தீர்வு தருவதாய் அமைந்துள்ளன. அவற்றில் சில,

விண்டோஸ் 7 வசதிகள்

altவிண்டோஸ் விஸ்டாவில் கிடைக்காத புகழை, எப்படியும் விண்டோஸ் 7 மூலம் பிடித்துவிட எண்ணிய மைக்ரோசாப்ட், தன் புதிய சிஸ்டத்தில் பல எதிர்பாராத வசதிகளைத் தந்துள்ளது. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம். இந்த சிஸ்டத்திற்கு மாறியுள்ள அனைவருக்கும் இவை உதவலாம்.
1. வேகமாக இயங்க பிளாஷ் ட்ரைவ்: கம்ப்யூட்டர் சிஸ்டம் இயங்கும் வேகத்தினை அதிகப்படுத்த ஓர் எளிய வழி, அதன் ராம் (RAM Random Access Memory) மெமரியை அதிகப்படுத்து வதுதான். ராம் மெமரியை அதிகப்படுத்துகையில், உங்கள் கம்ப்யூட்டர் சி.பி.யு. தனக்கு வேண்டிய டேட்டாவிற்காக, ஹார்ட் டிஸ்க்கை அணுக வேண்டிய தேவை குறையும். ராம் மெமரியிலிருந்து டேட்டா படிக்கப்படுவதால், ராம் மெமரி, ஹார்ட் டிஸ்க்கினைக் காட்டிலும் கூடுதல் வேகத்தில் டேட்டாவினைத் தருவதால், கம்ப்யூட்டர் அதிக வேகத்தில் இயங்கும். மேலும் ராம் மெமரி தற்காலிக மெமரி என்பதால், அதில் ஏற்றப்படும் டேட்டா, கம்ப்யூட்டர் இயங்கும் வரையில் மட்டுமே இருக்கும். கம்ப்யூட்டரை ஆப் செய்தவுடன், டேட்டா தங்காது.

ஆனால் சில கம்ப்யூட்டர் மதர்போர்டுகளில் தான், ராம் மெமரியை அதிகப்படுத்த காலியான ஸ்லாட்டுகள் இருக்கும். சில கம்ப்யூட்டர்கள் இவற்றை ஏற்றுக் கொள்ளாது. மேலும் மதர்போர்ட் வரை சென்று, புதிய ராம் மெமரி சிப்களை இணைப்பது எல்லோராலும் இயலாத காரியம். இதற்கு விண்டோஸ் 7 ஓர் எளிய வழி ஒன்றைத் தருகிறது. இதன் பெயர் ரெடி பூஸ்ட்  (Ready Boost). கூடுதல் மெமரி கொள்வதற்கு, ராம் நினைவகச் சிப்களைப் பயன்படுத்த வேண்டிய தில்லை. நம்மிடம் உள்ள பிளாஷ் ட்ரைவினையே அதற்குப் பயன்படுத்தலாம். ஆம், யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவ் ஒன்றினை, அதன் போர்ட்டில் செருகி, விண்டோஸ் 7 சிஸ்டத்தில் சில அமைப்புகளை ஏற்படுத்தினால், உங்கள் கம்ப்யூட்டர், பிளாஷ் ட்ரைவினை கூடுதல் ராம் மெமரியாக எடுத்துக் கொண்டு செயல்படும். உங்கள் கம்ப்யூட்டரின் பின்புறம் ஏதேனும் யு.எஸ்.பி.போர்ட்டில், பிளாஷ் ட்ரைவ் ஒன்றினைச் செருகி, இந்த செட் அப் மாற்றங்களை ஏற்படுத்தலாம். அப்போதுதான், நிலையாக அந்த பிளாஷ் ட்ரைவ், கூடுதல் ராம் மெமரியாக என்றும் செயல்படும்.


alternative description of the image

பிரபல இடுக்கைகள்