.

உங்களுக்கு விரும்பிய Ring Tone பலவழிகளில் வடிவமைக்க-2

அலசல்கள்1000 இன் கடந்த பதிப்பொன்றிலே உங்களுக்கு விரும்பிய Ring Toneகளை வடிவமைக்க பலவழிகளைப் பற்றிப் பார்த்தோம். இப் பதிவினூடாக அதன் தொடர்ச்சியாக இன்னோர் வழி ஒன்று பற்றிப் பார்ப்போம்.மற்றையவற்றுடன் ஒப்பிடும்போது இதன் மூலம் பல நன்மைகள் கூட உண்டு.
இதுவும் ஒரு இலவச மென்பொருள் ஒன்றுதான். இதனைத் தரவிறக்கிக் கொள்ள இங்கு கிளிக் செய்யவும்.

நான் இம் மென்பொருளையே பயன்படுத்துகின்றேன். இவ் மென்பொருள் மூலமாக நமக்கு விரும்பிய பாடல் வரி ஒன்றை வெட்டியெடுப்பதுடன் விரும்பிய Format இலும் மாற்றிக் கொள்ளலாம். iPhone Ring Tone வடிவமைக்கத் தேடுகையிலேயே இவ் மென்பொருளானது எனக்கு அகப்பட்டது.

Ring Tone வடிவமைப்பது மட்டுமன்றி பலப்பல தேவைகளை நிறைவேற்றுமுகமாக இம் மென்பொருளானது வடிவமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பம்சமாகும்.

ஒருமுறை இதனை தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள். பின்னர் Multimedia வுடன் சம்பந்தப்பட்ட பலவேலைகளைச் செய்வதற்காக மென்பொருளைத் தேடி நீங்கள் அலையும் நேரத்தை இது மீதப்படுத்துமென்பது நான் கண்ட உண்மையாகும்.

இவ் மென்பொருள் பற்றிய மேலதிக பதிவினை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்.

1 Response to "உங்களுக்கு விரும்பிய Ring Tone பலவழிகளில் வடிவமைக்க-2"

  1. Anonymous Says:
    November 14, 2011 at 1:52 PM

    Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

    http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

Post a Comment

பிரபல இடுக்கைகள்