.

மலரும் இனிய புத்தாண்டை முன்னிட்டு அலசல்கள்1000 இன் அன்பளிப்பு

மலரும் இனிய புத்தாண்டை முன்னிட்டு அலசல்கள்1000 ஆனது தங்கள் ஒவ்வொருக்குமாக தனித்தனியாக அன்பளிப்பு ஒன்றை வழங்கவுள்ளது. தவறாமல் அனைவரும் இந்த அன்பளிப்பைப் பெற்று அலசல்கள்1000 ஐ வாழ்த்தும் முகமாக இங்கு உள்ள ஆகியவற்றின் விருப்பு பட்டனை கிளிக் செய்வதன் மூலம்  தங்கள் நண்பர்கள் அனைவரிடத்திலும் நான் சென்றடைய வழிவகுத்துச்  செல்லவும்.

G-Mail இல் இருந்து கைத்தொலைபேசிக்கு குறுந்தகவல் அனுப்ப.

உங்கள் ஜிமெயிலில் இருந்து கைத்தொலைபேசிக்கு இலவசமாக செய்தி அனுப்ப வேண்டுமா? இதோ உங்களுக்காக இப்பதிவு அமைகின்றது. பயன்படுத்திப் பாருங்கள்.
இதற்கு முதலில் ஜிமெயிலின் முகப்புப் பக்கத்திலே

ஒரே நேரத்தில் ஒரு உலாவியில் பல Facebook கணக்குகளை எவ்வாறு பயன்படுத்துதல்?


ஒரே நேரத்தில் ஒரு உலாவியிலிருந்து எவ்வாறு பல கூகிள் கணக்குகளை (ஜிமெயில்) கையாளலாம் என்பது பற்றி அலசல்கள்1000 இன் கடந்தவொரு பதிப்பிலே அலசியிருந்தோம். இப்பதிப்பினூடாக உலாவி ஒன்றில் ஒரே நேரத்தில் எவ்வாறு பல Facebook கணக்குகளை கையாளலாம் என்று பார்ப்போம்.

Start Menuஇல் தோன்றும் Recent Items களின் எண்ணிக்கையை மாற்ற.

விண்டோஸ் விஸ்டா,விண்டோஸ்7 போன்றவற்றில் நமக்கு விரும்பியவாறு எவ்வாறு Start Menu இல் உள்ளவற்றை மாற்றம் செய்வதென்று கடந்த பதிப்பில் பார்த்தோம். இப்பதிவின் மூலம்  Start Menu இல் உள்ள Recent Items இல் தோன்றும் பட்டியலின் எண்ணிக்கையை எவ்வாறு Register Editor ஐப் பயன்படுத்தி மாற்றலாம் என்று பார்ப்போம்.

Start Window ஐ எமது விருப்புக்கு ஏற்ப மாற்றியமைக்க.

Windows Key  ஐக் கிளிக் செய்யும்போது தோன்றும் விண்டோவே Start Window ஆகும். இதில் All Programs, Control Panel, Recent Programs, My Computer Shortcuts…… போன்றன காணப்படும். இவ் Start Window மூலம் நாம் அடையவேண்டிய பகுதியை விரைவில் சென்றடையலாம். அதாவது Shortcutsஆகும். இதிலே எவ்வாறு எமக்கு வேண்டியபடி மாற்றங்களைச் செய்யலாம் என்று இப்பதிவின் மூலம்  பார்ப்போம்.

Facebook இல் உள்ள News Ticker ஐ எவ்வாறு இல்லாமல் செய்வது?Facebook இன் தற்போதைய புதிய தோற்றத்திலே “News Ticker எனும் நிகழ்கால செய்கைகளை வரிசைப்படுத்தும் செயலி ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. இதன்மூலமாக யார் யார் தற்போது Facebook இல் தமது செயல்களைச் செய்கின்றார்கள் என்ற தகவல்களை அறிந்துகொள்ளலாம்.

கடந்த பதிப்பொன்றின் ஊடாக Facebook இல் தோன்றும் விளம்பரங்களை எவ்வாறு இல்லாமல் செய்வதென்று பார்த்தோம்.

உங்களுக்கு விரும்பிய Ring Tone பலவழிகளில் வடிவமைக்க-2

அலசல்கள்1000 இன் கடந்த பதிப்பொன்றிலே உங்களுக்கு விரும்பிய Ring Toneகளை வடிவமைக்க பலவழிகளைப் பற்றிப் பார்த்தோம். இப் பதிவினூடாக அதன் தொடர்ச்சியாக இன்னோர் வழி ஒன்று பற்றிப் பார்ப்போம்.

உங்களுக்கு விரும்பிய Ring Tone பலவழிகளில் வடிவமைக்க.


இன்றைய காலத்தில் செல்போன் பாவிக்காதவர்களே இல்லை எனலாம். அந்தளவிற்கு யாரிடம் வேண்டுமென்றாலும் செல்போன் தான். இச் செல்லிடத்தொலைபேசிகளில் யாராவது எமக்கு அழைப்பை ஏற்படுத்தும்போது அழைப்பின் ஒலியானது மற்றவர்களைக் கவரும் விதத்திலே அமையவேண்டும். அதற்காக நாம் நல்ல Ring Tone களைத் தெரிவு செய்யும் நோக்கில் மற்றவர்களை நாடுவதுண்டு. இனிமேல் அவ்வாறில்லாமல் நீங்களே உங்களுக்கு விரும்பிய பாடல் வரியினை Ring Tone ஆகமாற்றுவதற்கான சில எளிமையான மென்பொருட்களைத் தந்துள்ளேன். பயன்படுத்திப் பாருங்கள.விண்டோஸ் 8 இல் உள்ள முகப்புப் பக்கத்தை விண்டோஸ் 7 போல் மாற்ற.

விண்டோஸ் 8  இல் உள்ள Metro-Style user Interface ஆனது  tablet PC பாவனையாளர்களுக்கே மிகவும் பொருத்தமானது. நீங்கள் ஒரு வீட்டுக்கணணி பாவனையாளர் எனின் இது உங்களுக்கு பாவனைக்கு கடினமானதாக இருக்கலாம். எனவே நன்றாகப் பழகிய விண்டோஸ் 7 Start Menu தோற்றம் போல் எவ்வாறு மாற்றலாம் என்பது பற்றியதே இப்பதிவாகும்.

Facebook இன் Login பக்கத்தை படம் கொண்டு வடிவமைக்க.


Facebook இன் Login முகப்புப் பக்கத்தை தங்களுக்கு விரும்பிய படம் கொண்டு மாற்றம் செய்தால் எவ்வாறிருக்கும் என எண்ணுகின்றீர்களா? அப்படியானால் இப்பதிவு உங்களுக்காக. இதற்காக நீங்கள் Google Chorme உலாவியைப் பயன்படுத்த வேண்டும்.
போட்டோக்களின் கொள்ளளவைக் குறைப்பதற்கு -02


போட்டோக்களின் கொள்ளளவை எவ்வாறு குறைத்துக்கொள்ளலாம் என்று அலசல்கள்1000 இன் கடந்த பதிப்பொன்றிலே இருமுறைகளைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக இப்பதிப்பினூடாக இன்னோர் முறையொன்றினைப் பார்ப்போம். 

போட்டோக்களின் கொள்ளளவைக் குறைப்பதற்கு..


நாம் கமராக்களில் எடுக்கும் புகைப்படங்களின் அளவானது பெரும்பாலான வேளைகளில் அதிகமாகவே காணப்படும். இதனால் அப் படங்களை நாம் பென்ட்ரைவில் எடுத்துச்செல்ல அதன் கொள்ளளவு போதுமானதாக இருக்காது. அதேநேரம் கணணியில் சேமித்து வைப்பதாயின் வன்தட்டிலும் அதிக இடத்தைப் பிடிக்கும்.

விண்டோஸ் 8 இற்கான குறுக்குவழிப் பொத்தான்கள்.


விண்டோஸ்XP மற்றும் விண்டோஸ்7 இற்கான குறுக்குவழி பொத்தான்கள் பற்றி பொதுவாக அனைவரும் அறிந்திருப்பீர்கள். இப்பதிப்பின் மூலம் புதிதாக அறிமுகமாகிய  விண்டோஸ் 8  இற்கான குறுக்குவழி பொத்தான்கள் சிலவற்றை பார்ப்போம்.விண்டோஸ் 7 இல் USB Drive (USB Port) ஐ மறைப்பதற்கு...


தேவையற்ற PenDrive களின் அதிக பாவனையால் வைரஸ் தாக்கம், மற்றும் எமது கணணியில் உள்ள தகவல்களை ஏனையோர் PenDrive மூலம் களவாடாமல் இருக்க போன்ற பல்வேறு தேவைகளுக்காக நாம் கணணியில் உள்ள USB Port ஐ மறைக்க எண்ணியிருப்போம். ஆனால் எப்படி இதைச் செய்யலாம் என்றுதானே முடியவில்லை என்றும் வருத்தப்பட்டிருப்போம். அதற்க்கு தீர்வாக இப் பதிவு அமையுமென எதிர்பார்க்கின்றேன்.

வேறிடத்தில் பயன்படுத்திய Gmail கணக்கை Sign Out செய்ய மறந்துவிட்டீர்களா?

   Gmail ஆனது பலராலும் பயன்படுத்தும் Google இன் ஒரு மின்னஞ்சல் சேவையாகும். இதனை நாம் பாதுகாப்பான முறையில் கையாளவேண்டும்.
 இலகுவான கடவுட்சொல் வைத்திருந்தாலோ அல்லது பிற இடங்களில் பயன்படுத்திவிட்டு தவறுதலாக Sign Out கொடுக்க மறந்தாலோ அல்லது திடீரென ஏற்படும் மின்தடையால் Sign Out கொடுக்க முடியாமல் போதல் போன்றவற்றால் மற்றையவர்கள் உங்கள் கணக்கை திருடவோ அல்லது சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தவோ கூடும்.

ஒரு Browser இல் இருந்து ஒரே நேரத்தில் பல Google கணக்குகளை கையாள....

நாம் பொதுவாக ஒரு Browser இல் ஒருசமயத்தில் ஒரு கூகிள் கணக்கினையே கையாள்வதுண்டு. இன்னொரு கணக்கை கையாள்வதென்றால் அதனை Sign out செய்தபின்பே மற்றைய கணக்கை திறப்பதுண்டு. அல்லது வேறொரு Browser ஐத் திறந்து அதனைப் பயன்படுத்துவதுண்டு.

கூகிள் தேடலில் மேலுமோர் காமடித்தனம் ...


 அலசல்கள்1000 இன் கடந்தகாலப் பதிப்புக்களில்  கூகிளை தேடலுக்காய் அன்றி காமடித்தனமாய் விளையாடவும் பயன்படுத்தலாம் என்பது பற்றி தொடர்ச்சியாக அலசிவந்தோம். அந்தவகையில் இப்பதிப்பினூடாகவும் ஒரு விடயத்தை நண்பர்களுக்காய் பகிர்ந்துகொள்கின்றேன்.

தேடுதலுக்கல்லாது விளையாட்டுக்காய் கூகிள்.....


கடந்த அலசல்கள்1000 இன் இரு பதிப்புக்களிலே கூகிளை தேடுதல்கள் அல்லாது விளையாட்டாக எவ்வாறு பயன்படுத்தலாம் என்று அலசியிருந்தோம். இப்போது அதன் தொடர்ச்சியாக இன்னுமொரு விளையாட்டைப் பார்ப்போம்.
அதாவது கூகிள் முகப்புப் பக்கத்திலே "google" என்ற சொல்லுக்குப் பதிலாக அதில் ஒரு விளையாட்டை விளையாடிக் கொள்ளலாம்.

உங்கள் FaceBook பக்கத்தில் தோன்றும் விளம்பரங்களைத் தடுக்க...


நீங்கள் FaceBook கணக்கைத் திறந்து பயன்படுத்தும்போது உங்கள் பக்கத்திலே பல விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதைக் காணலாம். இவ்வாறான விளம்பரங்கள் சிலருக்கு உபயோகமாயிருப்பினும் எம்மில் பலருக்கு இடையூறாகவோ  காணவும்படலாம். எனவே இவ்வாறான விளம்பரங்களை எமது FaceBook பக்கத்திலிருந்து நீக்கினால் எப்படியிருக்குமென்ற எண்ணமும் பலருக்குத் தோன்றலாம். அதற்கு தீர்வாக இப்பதிவு அமையமென எதிர்பார்க்கின்றேன்.

Google தேடல் முடிவில் Facebook Like button ஐ கொண்டுவருவதற்கு...

பொதுவாக வலைப்பூக்கள் அல்லது இணையத்தளங்களில் வாசகர்களைக் கவருவதற்காக Facebook Like button  இணைக்கப்பட்டிருக்கும். இதன்மூலம் பதிவுகளை நமது முகப்புத்தக முகப்புப் பக்கத்தில் பெற்றும் கொள்ளலாம்.

தங்கள் Facebook இல் உள்ள நண்பர்கள் பற்றிய கணக்கீட்டைப் பெற...

தங்கள் Facebook கணக்கில் மொத்தம் எத்தனை நண்பர்கள் .... அதில் எத்தனைபேர் ஆண்கள் , எத்தனைபேர் பெண்கள் மற்றும் திருமணமான நண்பர்கள் எத்தனைபேர் , திருமணமாகாதவர்கள் எத்தனைபேர் என்பதுடன் உங்கள் சம வயதுக்காரர்கள் , உங்கள் Facebook கணக்கின் சுவர்ப்பக்கத்தில் அதிக பதிவிடுபவர் யார் என்ற தகவல்களோடு மேலும் பல தகவல்களை பெற ஆவலா?

Google இல் இன்னுமோர் காமடித்தனமான விளையாட்டு....


கடந்த அலசல்கள் 1000 இன் அலசுகையில் கூளிளை தேடுவதற்காக அல்லாது காமடித்தனமாய் விளையாட எப்படிப் பயன்படுத்தலாம் என்று அலசியிருந்தோம். நண்பர் ஒருவரின் வேண்டுகோளிற்கு அமைய இன்னுமோர் விளையாட்டுப் பற்றி இப் பதிவினூடாக பார்ப்போம்.

Google இல் ஒரு காமடித்தனமாய் விளையாட....

நாம் பொதுவாக கூகிளினை ஒரு தேடுபொறியாகவே பயன்படுத்துகின்றோம். எதைத் தேடுவதென்றாலும் கூகிள் பக்கம் செல்லாதவர்களே இல்லை என்னும் அளவிற்கு அதன் தேடலின் சிறப்பேயாகும்.
ஆனால் இவ்வாறு தேடலுக்கு பயன்படுத்தப்படும் கூகிளை நாம் காமடித்தனமாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதென்னவென்று கூட யோசிக்கலாம். நிறைய காமடித்தனமாக விளையாடலாம். அதிலொன்றை நாம் இப்போ பார்ப்போம்.

Facebook comments ஐ நண்பர்களுக்கு Tag செய்வது எப்படி...?

சாதாரணமாக நாம் நமது Facebook  கணக்கில் தரவேற்றம் செய்யும் படங்களையே நண்பர்களிடையே இணைத்துக் கொள்வது [ Tag ] வழமை. இதனால் நமது அனுபவங்களை நண்பர்களிடத்திலும் பகிர்ந்துகொள்வதுடன் நமது படங்களை நண்பர்கள் பார்வையிடும் சந்தர்ப்பத்தையும் அதிகரிக்கின்றோம். அத்துடன் அவர்களின் பின்னூட்டங்களையும் இதன்மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

ஜிமெயிலில் ஒரே நேரத்தில் பல ஆவணங்களை பதிவேற்றுவதற்கு[Attach பண்ண ].....

பொதுவாக நாம் மின்னஞ்சலில் இருந்து போட்டோக்கள் போன்ற பல ஆவணங்களை அனுப்பும்போது ஒவ்வொன்றாகவே தெரிவுசெய்து அனுப்புவதுண்டு. இது சிரமத்தையும் நீண்ட நேரத்தையும் எடுக்கும்.
எனவே இவ்வாறான சிரமத்தைக் குறைப்பதற்கு ஜிமெயிலில் ஒரு வசதி உள்ளது.

Face Book, Twitter போன்ற சமூக வலைத்தளப் பாவனையாளர்களுக்கு ஓர் எச்சரிக்கை....

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்ற பாரதியின் காலம் போய் இப்போ யாராயிருந்தாலும் இணையத்தை பற்றி அறியாதவர்கள் இல்லையென்ற அளவுக்கு போய்விட்டது. அதிலும் Face Book பற்றி அறியாதவர்களே இல்லை என்னுமளவிற்கு அதன் வளர்ச்சி எல்லையைத் தாண்டிவிட்டது. இதனைப் பற்றி கூறத் தேவையுமில்லை....

தங்கள் மடிக்கணணியின் மின்கலம் தொடர்பான POWER REPORT ஐப் பெறுவதற்கு...

தங்கள் மடிக்கணனியில் நுகரப்படும் மின்சக்தி மற்றும் மின்கலத்தின் ஆயுள் காலம் தொடர்பான மிக நுட்பமாக கணிக்கப்பட்ட POWER REPORT ஐ விண்டோஸ்7 இயங்குதளத்திலிருந்து பெற்றுக்கொள்ள வேண்டுமா? அப்படியாயின் கீழ் உள்ள செய்கையைப் பின்பற்றுங்கள்.

கூகிளிடமிருந்து[ Google ] தமிழர்களுக்கு புதியதோர் வரப்பிரசாதம்


தேடலில் முன்னோடியாகவிருக்கும் கூகிளானது தற்போது தமிழ் பேசுவோருக்காக நல்லதொரு சேவையினை வழங்க ஆரம்பித்துள்ளது. தமிழர்களுக்கு மட்டுமல்ல ஆங்கில மொழி பேசுவோரும் தமிழ் மொழியில் உள்ள தகவல்களை ஆங்கிலத்தில் மொழி மாற்றி பார்க்கக் கூடிய வசதியை தந்துள்ளது.

வைரஸ் தாக்கிய Folder Option மீளப் பெறுதல். என் கணணிக்கு ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாகவும், எனக்கு ஏற்பட்ட அதிக வேலைப்பளு காரணமாகவும் என்னால் நீண்ட நாட்களாக பதிவு இடமுடியாமல் போய்விட்டது. எனவே வாசகர்களின் எமாற்றத்திர்க்காக முதலில் மனம் வருந்துகின்றேன்.
 
Folder Option என்பது விண்டோஸ் பயனாளர்களுக்கு எவ்வளவு முக்கியமானது என்பது அனைவரும் அறிந்ததே. இதன்மூலம் நாம் ஆவணங்களை மற்றயவர்களுக்கு காட்டவோ அல்லது மறைத்துவைக்கவோ முடியும்.

புலன்கள் ஐந்தில்லை அதிகம், விளக்குகிறது விஞ்ஞானம்...!


புலன்கள் 5 என்றே நாம் இதுவரை அறிந்திருந்தோம். ஆனால் நவீன தொழில்நுட்ப வளர்ச்சி காரணாமாக இப்போ புலன்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
கீழே உள்ள வீடியோவை ஒருமுறை கட்டாயமாகப் பாருங்கள். விந்தைமிகு உலகத்தின் வியப்பான புது வரவுகளைப் பற்றி அறிந்துகொள்ளலாம்.

Photo 2 Text [ போட்டோவை எழுத்துக்களால் உருவாக்கவேண்டுமா? ]


பொதுவாக நாம் நமது தொலைபேசிகளிலே எழுத்துக்கள் மற்றும் இலக்கங்களைப் பயன்படுத்தி சிறிய உருவங்களை வரைந்து நண்பர்களுக்காக அனுப்புவதுண்டு.
ஆனால் உங்கள் புகைப்படங்களை; அவ்வாறு எழுத்துக்கள், இலக்கங்கள் மற்றும் குறியீடுகளைப் பயன்படுத்தி வரைந்தால் எவ்வாறு இருக்குமென எண்ணுகின்றீர்களா?
அவ்வாறாயின், குறியீடுகள் மூலம் உங்கள் புகைப்படங்களை எவ்வாறு உருவாக்கலாம் என்ற எண்ணத்திற்கு தீர்வாக ஒரு தளம் உள்ளது.

FaceBook, Twitter போன்றவற்றில் ஆங்கிலத்தில் பிழையின்றி பதிவிட அருமையான அகராதி.


பொதுவாக நாம் ஆங்கிலத்தில் எழுத்துக்களை Type செய்யும்போது சிலசமயங்களில் எழுத்துப் பிழை விடுவதுண்டு. அல்லது எழுத்து தெரியாமல் சொல்லொன்றினை Type செய்வதற்காக Dictionary ஐ நாடுவதுண்டு. Microsoft Word இல் என்றால் பிழையாக Type செய்தால் கீழ் கோடிடுவதன்மூலம் உடனடியாக பிழையை கண்டறிந்து திருத்தியும் விடலாம். இதேபோல் நமது தொலைபேசிகளிலும் dictionary ஐப் பயன்படுத்தும் வசதி உண்டு.
ஆனால் Facebook, Twitter, Email போன்றவற்றிலோ அல்லது சாதாரணமாகப் பயன்படுத்தும் Text Editors களிலோ [Notepad, WordPad ect… ] இந்த வசதி இல்லை. எனவே நாம் சிலசமயம் சொல் தெரியாமல் கஷ்டப்படுவதுமுண்டு.

Select default operating system for startup


எமது கணனிகளில் சில தேவைகளின் நிமித்தம் நாம் ஒன்றுக்கு மேற்பட்ட இயங்குதளங்களை நிறுவிப் பயன்படுத்துவதுண்டு. இவ்வாறான சந்தர்ப்பங்களில் கணணியை இயக்க ஆரம்பிக்கும்போது வேறு இயங்குதளங்கள் இயங்க ஆரம்பித்துவிடும்.
அதாவது Windows OS பயன்படுத்தும் நீங்கள் வேறு சில தேவை கருதி Linux OS நிறுவியிருப்பீர்கள். மீண்டும் கணணியை இயக்கும்வேளை எந்த இயங்குதளத்தைப் பயன்படுத்தப் போகின்றீர்கள் என்பதை தெரிவுசெய்யவேண்டும். ஆனால், தெரிவுசெய்வதை மறந்துபோய் இருந்தீர்களானால் மற்றைய இயங்குதளம் இயங்க ஆரம்பித்துவிடும். எனவே மீண்டும் கணணியை Resert செய்யவேண்டி ஏற்படும்.

Online இல் Photo Editing செய்ய.

l
நாம் பொதுவாக வீட்டிலே எமது கணணியின் மூலம் படங்களை மாற்றியமைப்பதற்காக Adobe Photoshop போன்ற மென்பொருட்களை பயன்படுத்துகின்றோம். வெளியிடங்களில் இருக்கும் சந்தர்ப்பங்களில் படங்களில் Editing செய்யவேண்டிய தேவை ஏற்படும்போது கைப்பழக்கம் காரணமாக வேறு மென்பொருட்களை பயன்படுத்தி Edit செய்வது கடினமாகக் கூட இருக்கும். எனவே இவ்வாறான வேளையில் நாம் எமது கணணியையே நாடுவதுண்டு.

நீங்கள் வழங்கும் பெயர்களை கணணி வாசித்துக் காட்டவேண்டுமா?


நீங்கள் Type செய்யும் பெயர்கள் அல்லது வசனங்களை உங்கள் கணணியானது வாசித்துக் காட்டினால் எப்படியிருக்குமென்று ஆசைப்படுகின்றீர்களா? இதற்காக மென்பொருட்களைத் தேடி இணையத்தில் வலம் வந்தீர்களா? ஆசை நிறைவேறவில்லையா? கவலையை விடுங்கள்.
உங்கள் ஆசையை நிறைவேற்ற இந்த சிறிய செய்கையைச் செய்துபாருங்கள்.
கீழ் உள்ளதை அப்படியே பிரதிசெய்து[Copy] அதனை Notepad ஒன்றினைத் திறந்து அதிலே அப்படியே ஒட்டிவிடுங்கள்[Paste].

தங்கள் கணணி இயங்க ஆரம்பிக்கும்போது பயனாளர்களுக்கு அறிவுறுத்தலை வழங்குவதற்கு....


தலைப்பு சற்று புரியவில்லையா? என்ன குழப்பம்? கவலையை விடுங்கள்... அதாவது நீங்கள் உங்கள் சொந்தப் பாவனையில் உள்ள கணணியை உங்கள் நேரடிக் கண்காணிப்பின் கீழேயே பிறரைப் பயன்படுத்த அனுமதிப்பது வழமை. ஏனெனில் தாங்கள்; தங்கள் கணணிமேல் வைத்துள்ள கவனிப்பு மற்றும் அக்கறை போல் மற்றைய விருந்தாளிகள் வைத்திருக்க மாட்டார்கள் என்பது அனைவரும் தெரிந்ததே.
கணணி வைத்திருக்கும் அனைவருக்கும் ஏற்படும் பொதுவான பிரச்சனை என்றால் வைரஸ் ஆகத்தான் இருக்கும். எனவேதான் நாம் Pen Drive போன்றவற்றை பாவிக்கும்போது வைரஸ் எதிர்ப்பான்களைக் கொண்டு நன்கு சோதித்தபின் அவற்றைப் பயன்படுத்துகின்றோம்.

Default Programs files Folder ஐ நமது விருப்பத்துக்கேற்ப மாற்றல்.


கணணியில் நாம் மென்பொருட்களை நிறுவும்போது சாதாரணமாக மென்பொருட்களானது C Drive இல் Programs file  இலேயே Default ஆக[C:\Programs Files ] நிறுவப்படும். வேறு Drive இனுள் குறித்த Folder இல் நிறுவ வேண்டுமாயின் நாமே அதற்கான பாதையைக்[ Path] காட்டவேண்டும். இவ்வாறு வேறு Drive இல் நிறுவப்படுவதால் C Drive இல் போதிய இடத்தை நாம் பேணிக்கொள்ளலாம்.
ஆனால் நம்மில் பலர் வேறு  Drive இனுள் நிறுவுவதற்கான பாதையைக் காட்ட சோம்பேறித்தனம் காரணமாக Default ஆக உள்ள C Drive இலேயே நிறுவுவதுண்டு. அவ்வாறு மாற்றம் ஏதும் செய்யாமல் C Drive இனுள்ளேயே நிறுவுபவர்களுக்காகவே இப்பதிவு.

பெரிய அளவான கோப்புக்களை இலகுவாக அனுப்ப.


 நாம் பொதுவாக மின்னஞ்சல் மூலமாக 10MB யிலும் குறைவான சிறிய கோப்புக்களையே அனுப்புவதுண்டு. அப்படி கூடுதலான அளவில் போட்டோக்களை அனுப்பவேண்டிய சந்தர்ப்பம் ஏற்படும்வேளையில் பல பகுதிகளாக அனுப்புவது வழமை.

ஆனால்; வீடியோ போன்ற கோப்புக்களை பல துண்டுகளாக பிரித்து அனுப்புவதென்பது சற்று கடினமானதொன்றே.

உங்கள் கணணியில் மென்பொருட்கள் எதுவுமின்றி விரும்பத்தகாத தளங்களுக்குச் செல்வதைத் தடுக்க [ Block Any Site In Your Computer ]


இணையத் தொடர்பு உள்ள உங்கள் கணணியில் விரும்பத்தகாதது எனக் கருதப்படும் தளங்களுக்கு சிறுவர்களோ அல்லது உங்கள் ஏனைய உறவினர்கள் அல்லது நண்பர்களோ செல்வதைத் தடுப்பதற்காக மென்பொருட்கள் எவற்றின் உதவியும் இல்லாமல் எவ்வாறு மேற்கொள்வது என்பது பற்றியதே இன்றைய இடுகையின் நோக்கமாகும்.
 இதற்காக நீங்கள் சிறியதொரு செய்கையை மேற்கொண்டால் போதும்.

சமூக வலைத்தளங்களில் விடுமுறைக்கால பதிவை பதிவிட...
வலைப்பூவிலே[Blogspot] விடுமுறை காலத்தில் பதிவிடுவது பற்றி யாவருமே அறிந்திருப்பீர்கள். அதுபோலவே இன்று நாம் எமது முகப்புத்தகக் கணக்கில்[ FaceBook ] எவ்வாறு குறிக்கப்பட்ட எதிர்காலத்தில் எமது நிலையை[ Status ] பதிவிடுவது என்று பார்ப்போம்.

நண்பர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிக்கவோ அல்லது ஏதேனும் பிற விடயங்களை சுவர்ப்பக்கத்தில்[ wall paper ] எதிர்காலத்தில் பிரசுரிக்கவேண்டிய தேவை ஏற்படும்போது சிலவேளைகளில் நாம் அதனை மறந்தோ அல்லது இணையத்தொடர்பு அற்றவர்களாகவோ இருக்கலாம். இவ்வாறான சந்தர்ப்பங்களில் அதனை நிறைவேற்ற இப்பதிவு பெரிதும் உதவும் என நம்புகின்றேன்.

player களில் ஆங்கிலப் பாடல்களுடன் சேர்த்து அதன் வரிகளையும்[Lyrics] படிக்க


நாம் Windws media player  போன்ற player களில் ஆங்கிலப் பாடல்களைக் கேட்கும்போது அதன் வரிகளையும் [Lyrics] சேர்த்துப் படிக்கவேண்டிய தேவை ஏற்படும்போது பொதுவாக இணையத்தளங்களில் இருந்து பாடல் வரிகளை வரிவடிவிலேயே தரவிறக்கி பாட்டுடன் ஒப்பிட்டு பார்ப்பதுண்டு.
அனால்; iTuens , Winamp , Windws media player  போன்ற player களில் இணையத்தளங்களில் இருந்து online இல் பாடல்களைக் கேட்கும்போது அதன் வரிகளையும் [Lyrics] சேர்த்துப் படிக்கவேண்டி ஏற்படும்போது இனிமேல் அவ்வாறெல்லாம் செய்யத் தேவையில்லை. Player களிலேயே வரிவடிவத்தைக் கொண்டுவரலாம்.
இதற்கு நீங்கள் கீழுள்ள தொடுப்பைக் கொடுத்து குறித்த தளத்துக்குச் செல்லுங்கள்.

கணணித்திரையை Lock செய்வதற்குரிய ShortCut ஐ உருவாக்க


நாம் கணணியில் வேலை செய்துகொண்டிருக்கும் போது அவசரமான ஒரு வேளையில்  அதாவது வேண்டப்படாத அவசரமான வேளைகளில் பிறரிடமிருந்து எமது ஆவணங்களை பாதுகாப்பதற்காக உடனே கணணியை பூட்டுவதற்கு[ Lock செய்ய ] நாம் எமது கணணியின் முகப்புத்திரையில்[ Desktop ] ஒரு ShortCut ஒன்றை எவ்வாறு உருவாக்கிப் பயன்படுத்தலாம் என்பதே இப்பதிவின் 
நோக்கமாகும்.

இதற்காக நீங்கள் கீழே உள்ள படிகளை செய்தால் போதும்.Face Book இல் Profile Picture இற்கு எவ்வாறு சின்னம்[ BADGES ] இடுவது...

 


Face Book இல் Profile Picture இற்கு எவ்வாறு சின்னம்[ BADGES ]  மாற்றுவது என்பது பற்றியதே இப்பதிவாகும். புதியவர்களுக்காக இடுக்கையிடப்படுகின்றது.

முதலில் கீழ் உள்ளதை கிளிக்செய்து குறிப்பிட்ட அத் தளத்துக்குச் செல்லுங்கள்.கணனியில் Health Report ஐ பார்வையிட...


நமது கணனியில் உள்ள அனைத்து விதமான வன்பொருட்கள் மற்றும் பிற சாதனங்கள் பற்றிய Health Report  இனை மிகவும் விபரமாக அறிய விரும்புகின்றீர்களா?

இதற்காக வெளியிலிருந்து எதுவித மென்பொருட்களையும் தரவிறக்கி நிறுவவேண்டிய அவசியமில்லை.  இதற்காக நீங்கள் செய்யவேண்டியது இதுதான்,

முதலில் நீங்கள் உங்கள் Start Button ஐ கிளிக் செய்து Start Menu விலுள்ள Start Search எனுமிடத்தில் “performance and information” என்பதைக் கொடுத்து Enter செய்யவும்.Face Book இன் திரையில் உள்ள போட்டோக்களை ZOOM செய்து பார்க்க.


Face Book இல் நாம் சாதாரணமாக படங்களைப் பார்க்கும்போது அவை சிறியவையாகவே காணப்படுகின்றன. இவற்றை பெரிதாக்கிப் பார்ப்பதற்கு நாம் அப் படத்தினை புதிய பக்கத்தில் திறந்தே பெரிதாக்கிப் பார்க்கின்றோம்.

Microsoft Word இற்கு password கொடுத்து பாதுகாத்து வைக்க..


நீங்கள் Microsoft Word அல்லது  Excel  அல்லது  Powerpoint போன்றவற்றில் தயார்செய்யும் சுயவிபரக்கோவை, பரீட்சை வினாத்தாள்கள் போன்ற ஆவணங்களை உங்கள் அனுமதியின்றி மற்றவர்கள் பார்க்கக்கூடாது அல்லது ஏதும் மாற்றங்கள் செய்யக்கூடாது என்ற தேவை ஏற்படும்போது; அதற்கான மென்பொருட்களைத் தேடி சிலர் நாடுவதுண்டு. இதன்போது மென்பொருள் சம்பந்தமாக சில பிரச்சனைகளையும் எதிர்கொள்ளவேண்டி ஏற்படலாம்.
நம்மில் பலர் Microsoft Office இல் இவ் வசதியை தந்தும்கூட “வெண்ணை இருக்க நெய்க்கு அலைவானேன்” என்பதுபோல வேறு மென்பொருட்கள் பக்கம் நாடுவதுண்டு.
இவ் வசதியை பயன்படுத்துவது மிகவும் இலகுவானதே.


புதிய பாதையில் பிரவேசிக்கும் இன்டர்நெட்!


இந்த உலகம் புதியதொரு இணையம் ஒன்றைக் காணப் போகிறது. தற்போது பின்பற்றப்படும் இணைய முகவரி அமைப்பு விரைவில் முற்றிலுமாகப் பயன்படுத்தப்பட்ட நிலையில், புதிய வழி வகை தொடங்கப்பட உள்ளது.

இணையத்தில் இணையும் ஒவ்வொரு கம்ப்யூட்டருக்கும், அதனை தனி அடையாளம் காட்டும் முகவரி ஒன்று தரப்படுகிறது. இதற்கென உலக அளவில் ஒரு நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.

Google இல் இலகுவாக நமக்கு வேண்டியதைத் தேடுவதற்கு.


நாம் எமக்குத் தேவையான இணையத்தளங்கள், பாடல்கள், படங்கள் போன்ற எந்தத் தகவல்களையும் இணையத்திலிருந்து பெற்றுக்கொள்ள நாம் Google, Yahoo, Bing போன்ற தேடியியந்திரங்களையே(Search Engine) பயன்படுத்துகின்றோம். இவற்றுள் நாம் பொதுவாக google ஐயே பயன்படுத்துவதுண்டு.
இத் தேடியியந்திரங்களில் நாம் தேடவேண்டியவற்றை சரியாகக் கொடுக்க தவறும் பட்சத்தில் எமது தேடுதலில் முழுமையான பலனை அடைய முடியாது.

All- in -One Software ஐ இலவசமாக பெற.


All- in -One  என்று பொதுவாக ஒன்றிலே பல தொழிற்பாடுகளை செய்யக்கூடிய இலத்திரனியற் சாதனங்களைத்தானே கேள்விப்பட்டோம். இதென்னவென்று கூட யோசிக்கலாம்.
ஆம். பொதுவாக கணனியில் இயங்குதளத்தை நிறுவியபின்னர் எமக்கு தேவைப்படுவது மென்பொருட்கள் அடங்கிய சிடியே. இதனை நாம் கடையிலிருந்தோ அல்லது நண்பர்களிடமிருந்தோ அல்லது அடிக்கடி இயங்குதளத்தை நிறுவுபவர்கள் எனின் சேகரித்தோ கூட வைத்திருக்கலாம். ஆனால் உங்களிடம் அவ்வாறு மென்பொருட்கள் ஏதும் போதியளவு இல்லாதவேளை இயங்குதளத்தை அழித்து மீண்டும் நிறுவவேண்டி ஏற்படும் சந்தர்ப்பத்தில் CD க்காக அலையவேண்டியதில்லை.

கணனியில் நிறுவியுள்ள அனைத்து Driver களையும் BACK UP எடுத்துக்கொள்ள.


அலசல்கள்1000  இன் கடந்தவொரு பதிப்பிலே விண்டோஸ் இயங்குதளம் நிறுவவேண்டிய தேவையேற்படும்போது Driver Cd இல்லாதுவிட்டால் எவ்வாறு அதனை இணையத்தளத்திலிருந்து பெற்றுக்கொள்வது என்பதுபற்றி அலசியிருந்தோம். இதனை படிக்க இங்கு சொடுக்கவும்.
ஆனால், இப்போ அதனையும்விட சற்று முன்னகர்ந்து; ஒவ்வொரு Driver களையும் தரவிறக்கிக் கொள்வதற்குப் பதிலாக எமது கணனியில் நிறுவப்பட்டிருக்கும் அனைத்து Driver களையும்  அப்படியே எவ்வாறு BACK UP எடுத்து மீண்டும் நிறுவிக்கொள்வது என்பது பற்றி பார்ப்போம்.

பிரபல இடுக்கைகள்