நீங்கள் சில சமயம் உங்களுக்குத் தேவையான ஆவணங்கள் மற்றவர்களிடத்தில் இருந்து பாதுகாக்க மறைத்து(Hidden) வைப்பதுண்டு. ஆனால் இவற்றை Folder Options இல் சென்று Hidden ஐ எடுத்துவிட்டால் இது சுலபமாக எல்லோருக்கும் தெரிந்துவிடும். ஆனால் இப்பதிவு சற்று வித்தியாசமான முறை முயற்சித்துப் பாருங்கள்.
முதலில் மறைத்து வைக்கவேண்டிய கோப்புறையை நீங்கள் விரும்பும் இடத்தில் இட்டுக்கொள்ளுங்கள். பின்னர் கீழுள்ள படத்தில் காட்டியவாறு Right-Click செய்து Properties என்பதை தெரிவு செய்யவும்.
இப்போ கீழ் உள்ளவாறு தோன்றும். இதிலே Customize என்ற Tap ஐ கிளிக் செய்து அதில் உள்ள Change Icon என்பதை தெரிவு செய்யவும்.
இப்போ கீழ் உள்ளவாறு ஒரு விண்டோ தோன்றும். அதிலே 01, 02, 03 ஆகிய இலக்கங்களால் காட்டப்பட்ட இடைவெளிகளில் ஏதாவது ஒன்றை தெரிவுசெய்த்து OK பண்ணவும்.
இப்போ Folder இற்குரிய Icon ஆனது மறைக்கப்பட்டுவிடும். பின்னர் கீழ் காட்டியவாறு Folder இற்கு பெயரை மாற்றவும்.
இதிலே Folder இற்குரிய பெயராக Alt Key யை அழுத்திக்கொண்டு 0160 என்று Type செய்யவும். இப்போ கண்ணுக்குப் புலப்படாத FOLDER Name உருவாகிவிடும்.
அவ்வளவும்தான் உங்களுக்கு மட்டுமே Folder இருக்கும் இடம் இப்போ தெரியும். மறந்து போனால் அம்மட்டுந்தான்......
June 16, 2012 at 8:42 PM
பலருக்கும் பயன்படும் பதிவு எனக்கும் பயன்படும் பகிர்ந்த சகோவுக்கு நன்றி
June 17, 2012 at 12:13 PM
நல்ல வசதி தான்!