.

My Documents இன் History ஆனது LogOff செய்யும்போது தானாக அழிப்பதற்கு...


நாம் கணணியை இயக்கியது முதல் நிறுத்தும் வரை என்னென்ன செய்தோம் என்பதனை History என்பதன் ஊடாக நாம் பார்த்துக்கொள்ளலாம். எனவே தனிப்பாவனையில் உள்ள கணணியைவிட பொதுப்பாவனையில் உள்ள கணணியைக் கையாளும்போது அடிக்கடி History இனுள் சென்று அதனை அழிக்கவேண்டிய சந்தர்ப்பம் கூட உங்களுக்கு ஏற்பட்டிருக்கலாம்.
அவ்வாறில்லாமல் நாம் கணணியை Log Off செய்யும் ஒவ்வொரு கணமும் நாம் பயன்படுத்திய History ஐ தன்னிச்சையாகவே அழிப்பதற்கு ஒரு முறையைக் கையாளலாம். இதனை எவ்வாறு செய்வதென்று இப்போ பார்ப்போம்.

முதலில் உங்கள் கணணியை Administrative rights இனூடாக Log in செய்து, பின்னர்  Start Button ஐ கிளிக் செய்து RUN ஐ திறந்துகொள்ளுங்கள்.
பின்னர் இதில் " regedit " என்று Type செய்து Enter செய்துகொள்ளுங்கள். இப்போ Registry Editor ஆனது திறந்துகொள்ளும்.

இப்போ இதில் கீழ் காட்டிய ஒழுங்கில் சென்று Explorer என்பதை அடையவும்.

 HKEY_Current_User \ SOFTWARE \ Microsoft \ Windows \ CurrentVersion \Policies\Explorer
             

இப்போ தோன்றும் விண்டோவின் வலப்பக்க பகுதியில் வைத்து Righ Clickt செய்து New இல் உள்ள DWORD value என்பதைக் கொடுத்து புதிய DWORD ஐ உருவாக்கவும். இப்போ உருவாக்கப்பட்ட புதிய DWORD ஐ Double Click செய்து அல்லது Right Click செய்து Modify என்பதைக் கொடுத்து அதனை திறந்துகொள்ளுங்கள்.


இதில் Value Name என்பதற்கு விரும்பியதொரு பெயரை கொடுக்கவும். [உதாரணமாக:-  ClearRecentDocsOnExit எனக் கொடுக்கவும்.] Value Data என்ற இடத்தில் " 1 " ஐக் கொடுத்து Enter செய்யவும். இப்போ உங்கள் கணணியானது Log Off செய்யப்படும்போது தானாகவே நீங்கள் பயன்படுத்திய My Document History ஆனது அழிக்கப்பட்டுவிடும்.

உங்களுக்கு இத் தேவையை மீண்டும் நிறுத்தவேண்டி ஏற்படின் Value Data என்ற இடத்தில் " 0 " ஐக் கொடுத்து Enter செய்தால் போதும்.




1 Response to "My Documents இன் History ஆனது LogOff செய்யும்போது தானாக அழிப்பதற்கு..."

  1. ANBUTHIL says:
    June 7, 2012 at 3:46 AM

    பயனுள்ள பதிவு நன்றி அண்ணா

Post a Comment

alternative description of the image

பிரபல இடுக்கைகள்