.

ஒரு Gmail இற்கு வரும் Message ஐ பிறிதொரு Email இற்கு தன்னிச்சையாகவே Forward செய்ய.


வெவ்வேறு தேவைகளின் நிமித்தம் நாம் பல மின்னஞ்சல் கணக்குகளை பயன்படுத்துவதுண்டு. ஆனால் எல்லா நேரங்களிலும் நாம் எல்லா கணக்குகளையும் கையாள நேரம் போதாமையிருக்கலாம். இவ்வேளையில் ஓர் கணக்குக்கு வரும் செய்திகளை எவ்வாறு நாம் பிறிதோர் கணக்குக்கு Forward செய்வது என்று இப்பதிவினூடாகப் பார்ப்போம்.

இதற்கு நீங்கள் முதலில் எந்தக் கணக்கினுள் உள்வரும் செய்திகளை மற்றைய கணக்கிற்கு இடமாற்றம் செய்யப் போகின்றீர்களோ அந்த Gmail கணக்கை முதலில் திறந்துகொள்ளுங்கள்.
இதன் வலது பக்க மேல் மூலையில் உள்ளதை கிளிக்செய்து Setting என்பதினுள் செல்லவும்.
இப்போ உங்களுக்கு கீழ் உள்ளவாறான பக்கம் தோன்றும். இதிலே “Forwarding and POP/IMAP” என்பதை கிளிக் செய்து அதிலே உள்ள Add a forwarding Address என்ற பொத்தானை கிளிக் செய்யவும்.


இப்போ இவ் மின்னஞ்சலுக்கு வரும் செய்திகளை எந்த மின்னஞ்சலுக்கு Forward செய்யப் போகின்றீர்களோ அதனை தரப்பட்ட இடத்தில் கொடுத்து Next என்பதை அழுத்தவும்.
இப்போ PROCEED என்பதனைக் கொடுத்து அடுத்து OK ஐக் கொடுங்கள்.


இப்போ கீழ் உள்ளவாறான பக்கம் தோன்றும்.

இப்போ நீங்கள் எந்த மின்னஞ்சலுக்கு செய்திகள் கிடைக்கப்பெற வேண்டுமோ அதனை NEW TAP இல் அல்லது வேறு உலாவியில் திறந்துகொள்ளுங்கள். இவ் மின்னஞ்சலில் ஓர் இணைப்பு ஒன்று அனுப்பப்பட்டிருக்கும். இதனை கிளிக் செய்து உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சிலசமயம் இவ் இணைப்பு கிடைக்கப்பெற்றிருக்காவிடில் மேலுள்ள படத்தில் காட்டப்பட்ட Re-Send Email என்பதை கிளிக் செய்யவும்.
இப்போ உங்கள் செய்கை பூர்த்தியாக்கப்பட்டுவிட்டது. இனிமேல் உங்கள் விருப்பம்போல் மற்றைய கணக்குக்கு வரும் செய்திகள் அனைத்தும் உங்கள் கணக்குக்கு தன்னிச்சையாகவே இடமாற்றப்பட்டுவிடும்.
இவ் வசதியை மீண்டும் நிறுத்தவேண்டியேற்படின் மேலுள்ள படத்தில் காட்டியவாறு உள்ள Remove Address என்பதை கிளிக் செய்யுங்கள். இப்போ கீழ் உள்ளவாறு தோன்றும் இதனை OK கொடுத்தால் போதும். இவ்வசதி நிறுத்தப்பட்டுவிடும்.

இப்பதிவு பிடித்திருந்தால் பின்னூட்டத்துடன் சந்தியுங்கள்.

0 Response to "ஒரு Gmail இற்கு வரும் Message ஐ பிறிதொரு Email இற்கு தன்னிச்சையாகவே Forward செய்ய."

Post a Comment

alternative description of the image

பிரபல இடுக்கைகள்