.

Gmail இல் போதிய இடமில்லை என்ற செய்தி வருகின்றதா?


இணையத்திலே மின்னஞ்சல் போன்ற கணக்குகளை பயன்படுத்தும் போது குறிக்கப்பட்ட அளவு இட ஒதுக்கீடே வழங்கப்படுவதுண்டு. இதன் பயன்பாட்டு உச்ச எல்லையை அடையும்போது தொடர்ச்சியாக மின்னஞ்சலைப் பயன்படுத்தமுடியாத சந்தர்ப்பம் ஏற்படலாம். இதுபோன்றதொரு பிரச்சனையே நண்பர் ஒருவருக்கு ஏற்பட்டது. இதனை எவ்வாறு தீர்த்துக் கொள்ளலாம் என்று இப்பதிவினூடாகப் பார்ப்போம்.


நீங்கள் உங்கள் மின்னஞ்சல் கணக்கை திறந்துகொள்ளும்போது அதன் கீழ்ப் பக்கத்திலே கீழ் உள்ள படத்தில் காட்டியவாறு மொத்தமாக பயன்படுத்தக்கூடியதில் எவ்வளவு வீதமான இடத்தினை இப்போ பயன்படுத்தியுள்ளீர்கள் என்ற தகவலை பார்க்க முடியும்.



இதன் பயன்பாட்டு அளவு கூடினால் நாம் தேவையில்லாததை அழிக்க வேண்டும். இதனை எவ்வாறு மேற்கொள்ளலாம் என்று இப்போ பார்ப்போம்.

முதலில் உங்கள் கணக்கில் உள்ள Inbox, Sent Mail, Spam, Drafts….. போன்றவற்றை ஒவ்வொன்றாக திறந்து அதிலே நீங்கள் தேவையில்லை என எண்ணும் அனைத்து பகுதிகளையும் தெரிவுசெய்து ஒவ்வொன்றாக அழித்துவிடவும்.



இப்போ மேல் உள்ள படத்தில் காட்டியவாறு Trash என்பதை கிளிக் பண்ணவும். இப்போ கீழ் உள்ளவாறு பக்கம் தோன்றும்.



இதிலே சிவப்பு வட்டமிடப்பட்டத்தை கிளிக் பண்ணி தெரிவுசெய்யவும். இப்போ கீழ் உள்ள அனைத்தும் தெரிவுசெய்திருப்பதைக் காணலாம். இனி பச்சை வட்டமிட்டுக் காட்டப்பட்ட Delete Forever என்பதைக் கிளிக் பண்ணவேண்டியதுதான்.

இப்போ மீண்டும் மேலே கூறியவாறு மின்னஞ்சலின் கீழ்ப் பகுதியைப் பார்க்கவும். பயன்பாட்டின் அளவு மிகக் குறைந்து காணப்படும்.

1 Response to "Gmail இல் போதிய இடமில்லை என்ற செய்தி வருகின்றதா?"

  1. P.P.S.Pandian says:
    December 30, 2012 at 4:12 PM

    மிகமிக நன்றி நல்ல பயனுள்ள பதிவு ..P.Sermuga Pandian

Post a Comment

alternative description of the image

பிரபல இடுக்கைகள்