.

You Tube இல் பார்த்த History ஐ எவ்வாறு அழிக்க...?

வீடியோ சம்பந்தமான தேடல்களுக்காக நாம் You Tube ஐப் பயன்படுத்துகின்றோம். அவ்வாறு பார்த்தபின்னர் சிலசமயம் பார்த்த வீடியோக்கள் முன்னிலையில் இருப்பதைக் கண்டு செய்வதறியாது திண்டாடியிருக்கலாம். இவ்வாறானவர்களுக்கு தீர்வாய் இப்பதிவு அமையுமென எதிர்பார்க்கின்றேன்.

முதலிலே You Tube பக்கத்திற்குச் செல்லுங்கள். இங்கே வலப்பக்க மேல் மூலையில் Sign in என்ற பொத்தான் காணப்படும். இதனை கிளிக் பண்ணுங்கள். இப்போ உங்களுக்கு கீழ் காட்டப்பட்டவாறு பக்கம் தோன்றும். இதிலே உங்கள் G-mail கணக்கின் பயனாளர் தகவலைக் கொடுத்து உள்ளே நுழையுங்கள்.



இப்போ உங்களுக்கு கீழ் உள்ளவாறு பச்சை வட்டத்தால் காட்டப்பட்ட முக்கோணியை கிளிக் செய்யும்போது இப்பக்கம் தோன்றும். இதிலே காட்டப்பட்ட Video Manager என்பதை கிளிக் பண்ணவும்.



இப்போ உங்களுக்கு கீழ் காட்டப்பட்டவாறு பக்கம் தோன்றும். இதிலே History அல்லது Search History என்பதை கிளிக் பண்ணவும்.



இப்போ உங்களுக்கு கீழ் காட்டப்பட்டவாறு பக்கம் தோன்றும். இதிலே பச்சை வட்டத்தால் காட்டப்பட்டதை கிளிக்செய்து அனைத்தையும் தெரிவுசெய்க. பின்னர் Clear all search History என்பதை கிளிக் பண்ணவும்.



இப்போ தோன்றுவதில் Clear all search History என்பதை கிளிக் பண்ணவும்.



இப்போ நீங்கள் பார்வையிட்ட அனைத்து விடயங்களும் அழிக்கப்பட்டு கீழ் உள்ளவாறு செய்தி தோன்றும்.



இனியென்ன பயப்பட வேண்டியதில்லைத்தானே.......


0 Response to "You Tube இல் பார்த்த History ஐ எவ்வாறு அழிக்க...?"

Post a Comment

alternative description of the image

பிரபல இடுக்கைகள்