.

Save as PDF என்ற Button ஐ எவ்வாறு MS Office 2010 /2013 இணைத்தல்.

MS Office2007 இற்கு மேற்பட்ட பதிப்புக்களிலே MS Word, MS Excel போன்றவற்றில் தயார் செய்த ஆவணங்களை எதுவித மேலதிக மென்பொருளை சேர்க்காமலே நாம் PDF File ஆக சேமித்துக்கொள்ளலாம். ஆனால் MS Office2007 இல் அவ்வாறு PDF ஐ சேமித்துக்கொள்ளவதாயின் மேலதிக இணைப்பொன்றை நிறுவ வேண்டும். அதற்காக இங்கே கிளிக் பண்ணவும். ஆனால் MS Office 2010 /2013 போன்றவற்றில் இவ்வசதி இருந்தும் ஒரு கிளிக்கிலேயே PDF ஆக சேமித்துக்கொள்ள என்ன செய்யலாம் என்று இப்பதிவினூடாகப் பார்ப்போம்.

இதற்கு முதலில் கீழ் உள்ள படத்தில் காட்டியவாறு பச்சை வட்டமிட்டுக் காட்டிய கீழ்நோக்கிய அம்புக்குறியை கிளிக் செய்யவும். பின்னர் காட்டியவாறு உள்ள “More Commands…” என்பதைகிளிக் செய்யவும்.



இப்போ கீழ் காட்டியவாறு விண்டோ ஒன்று தோன்றும். இதிலே “Choose Commands from: ” என்பதில் All Commands என்பதை தெரிவு செய்து, பின்னர் கீழ் உள்ள நிரலில் “ Publish as PDF or XPS” என்பதை தெரிவு செய்யவும்.



இப்போ நடுவில் உள்ள ADD என்றதை கிளிக் செய்தபின் OK பண்ணவேண்டியதுதான்.
இப்போ உங்களுக்கு கீழ் உள்ள படத்தில் காட்டியவாறு PDF என்ற Button தோன்றியிருக்கும்.



இனியென்ன ஒரு கிளிக்கிலேயே உங்கள் ஆவணமானது PDF File ஆக சேமிக்கப்பட்டுவிடும். உங்கள் நேரத்தையும் சேமித்துக்கொள்ள வேண்டியதுதான்.....


1 Response to "Save as PDF என்ற Button ஐ எவ்வாறு MS Office 2010 /2013 இணைத்தல்."

  1. Unknown says:
    February 27, 2013 at 11:41 AM

    நல்ல தகவல் நண்பரே பகிர்வுக்கு நன்றி

Post a Comment

alternative description of the image

பிரபல இடுக்கைகள்