.
தேவையற்ற PenDrive களின் அதிக பாவனையால் வைரஸ் தாக்கம், மற்றும் எமது கணணியில் உள்ள தகவல்களை ஏனையோர் PenDrive மூலம் களவாடாமல் இருக்க போன்ற பல்வேறு தேவைகளுக்காக நாம் கணணியில் உள்ள USB Port ஐ மறைக்க எண்ணியிருப்போம். ஆனால் எப்படி இதைச் செய்யலாம் என்றுதானே முடியவில்லை என்றும் வருத்தப்பட்டிருப்போம். அதற்க்கு தீர்வாக இப் பதிவு அமையுமென எதிர்பார்க்கின்றேன்.
முதலில், START இனுள் சென்று அங்கே RUN என்பதைக் கிளிக் செய்யுங்கள்.
இப்போ தோன்றும் RUN விண்டோவில் “ regedit ” என்று type செய்து Enter பண்ணுங்கள்.
இப்போ உங்களுக்கு Registry Editor Window ஆனது தோன்றியிருக்கும். இதிலே கீழ் காட்டிய ஒழுங்கில் சென்று “ Start “ என்பதை அடைந்து அதனை Double Click செய்து திறந்துகொள்ளுங்கள். 
HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Services\USBSTOR 
இப்போ கீழ் காட்டியவாறு காணப்படும்.
இதில் Value Data: என்பதில்  இலக்கம் “4“ ஐக் கொடுத்து OK பண்ணவும்.
அவ்வளவுதான், உங்கள் கணணியை மீள இயக்கவும். இனிமேல் USB Port ஆனது செயலிழந்துவிடும்.
மீண்டும் செயற்படுத்த வேண்டுமாயின் இதே ஒழுங்கில் சென்று Value Data: என்பதில்  இலக்கம் “ 4 “ இற்குப் பதிலாக இலக்கம் “ 3 “ ஐக் கொடுத்து OK பண்ணி கணணியை மீள இயக்கவேண்டியதுதான்...
எங்கே முயற்சித்துப் பாருங்களேன்....
Subscribe to:
Post Comments (Atom)
பிரபல இடுக்கைகள்
- 
இணையம் மூலம் பணம் சம்பாதித்தல் எனும் நோக்கில் பல தளங்களின் ஆக்கங்களை படித்தும் முயன்றும் திருப்தி அளிக்காதவேளை இத் தளம் பற்றி அறிந்த நாள் மு...
 - 
நாம் சாதாரணமாக பாடல் கேட்பதற்காக பயன்படுத்தும் விண்டோஸ் மீடியா பிளேயரானது (Windows Media Player) க...
 - 
Side Bar இல் உள்ள அனிமேஷன் (Animation) போட்டோக்களுக்கு எவ்வாறு இணைப்பு (Link) கொடுப்பது என்பதே இப்...
 - 
கணணியில் நாம் மென்பொருட்களை நிறுவும்போது சாதாரணமாக மென்பொருட்களானது C Drive இல் Programs file இலேயே Default ஆக [C:\Programs Files ] நி...
 - 
நாம் YouTube இலே பல்வேறு வீடியோக்களை பார்வையிடுகின்றோம். இவற்றை தரவிறக்குவதற்காக பல்வேறு மென்பொருட்களை பயன்படுத்தியிருப்போம். ஆனால் இப்ப...
 




 
 
 



March 10, 2012 at 8:31 PM
பயனுள்ள தகவல் தந்தமைக்கு நன்றி என்றும் உங்கள் அன்பை தேடி அன்புதில்