.

Start Menuஇல் தோன்றும் Recent Items களின் எண்ணிக்கையை மாற்ற.

விண்டோஸ் விஸ்டா,விண்டோஸ்7 போன்றவற்றில் நமக்கு விரும்பியவாறு எவ்வாறு Start Menu இல் உள்ளவற்றை மாற்றம் செய்வதென்று கடந்த பதிப்பில் பார்த்தோம். இப்பதிவின் மூலம்  Start Menu இல் உள்ள Recent Items இல் தோன்றும் பட்டியலின் எண்ணிக்கையை எவ்வாறு Register Editor ஐப் பயன்படுத்தி மாற்றலாம் என்று பார்ப்போம்.
முதலில், “StratButton + R” ஐ அழுத்தி அல்லது Start இல் சென்று RUN என்பதை திறந்துகொள்ளுங்கள். இப்போ தோன்றும் RUN Window வில் “regedit” என்று type செய்து OK செய்யவும். இப்போ Registry Editor ஆனது திறக்கும். இதிலே கீழே காட்டப்பட்ட ஒழுங்கில் சென்று Explorer ஐ அடையவும்.
   

இதன் வலப்பக்கத்தில் வைத்து Right-Click செய்து New என்பதில் “ DWORD-(32bit) value “ என்பதை தெரிவுசெய்து அதன் Value name என்பதற்காக “MaxRecentDocs” என்று கொடுத்து; பின்னர் அதனை Double-Click செய்து திறந்துகொள்ளுங்கள்.

இப்போ தோன்றும் விண்டோவில் Value என்பதற்கு ஏதாவது நீங்கள் விரும்பும் இலக்கத்தையும் (உதாரணமாக 20), Base என்றபகுதியில் “Decimal” ஐயும் தெரிவுசெய்துOK செய்யவும்.

இப்போ உங்களுக்கு விரும்பிய எண்ணிக்கையில் Recent Items ஆனது காணப்படும்.




1 Response to "Start Menuஇல் தோன்றும் Recent Items களின் எண்ணிக்கையை மாற்ற."

  1. alasalkal1000 says:
    December 17, 2011 at 12:48 PM

    Thanks a lot.....

Post a Comment

alternative description of the image

பிரபல இடுக்கைகள்