.

ஒரே நேரத்தில் ஒரு உலாவியில் பல Facebook கணக்குகளை எவ்வாறு பயன்படுத்துதல்?


ஒரே நேரத்தில் ஒரு உலாவியிலிருந்து எவ்வாறு பல கூகிள் கணக்குகளை (ஜிமெயில்) கையாளலாம் என்பது பற்றி அலசல்கள்1000 இன் கடந்தவொரு பதிப்பிலே அலசியிருந்தோம். இப்பதிப்பினூடாக உலாவி ஒன்றில் ஒரே நேரத்தில் எவ்வாறு பல Facebook கணக்குகளை கையாளலாம் என்று பார்ப்போம்.
இதற்காக கூகிள் குரோம் உலாவியையே பயன்படுத்த முடியும். ஏனெனில் கூகிள் குரோமின் நீட்சியை இங்கு நிறுவ வேண்டும். இது கையாள்வதற்கு மிகவும் சுலபமானது. 

ஒருமுறை கணக்குக்குரிய மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல் என்பவற்றைக் கொடுத்தால் போதும். அது உலாவியில் முறைமாற்றிச்(Encrypt) சேமிக்கப்பட்டுவிடும். 

ஐந்து வரையான Facebook கணக்குகளை கையாளலாம். (குறிப்பு: உங்கள் சொந்தப்பாவனையில் உள்ள கணணியில் செய்வதே சிறந்தது. ஏனெனில் இது எமது நேரத்தை மீதப்படுத்தும். ஆனால் மற்றவர்களும் எமது கணக்கை பயன்படுத்தலாம்.)
இதற்கு முதலில் கூகிள் குரோம் உலாவியை திறந்துகொள்ளுங்கள்.
பின்னர் கீழ் உள்ள இணைப்பைப் பயன்படுத்தி குரோமின் நீட்சியை நிறுவிக்கொள்ளுங்கள்.
             
 
இப்போ குரோமின் வலதுபக்க மேல் மூலையில் Facebook இன் அடையாளம் காணப்படும்.

இதனை கிளிக் பண்ணவும். இப்போ கீழ் காட்டியவாறு செய்தி ஒன்று தோன்றும்.

இச் செய்தியில் உள்ள “here”  எனும் link  ஐ கிளிக் பண்ணவும். இப்போ கீழ் காட்டியவாறு தோன்றும் பக்கத்தில் தேவையான Facebook கணக்குகளை விரும்பிய பெயர்களுடன் கொடுத்து  சேமித்துக்கொள்ளவும்.

இனிமேல்; ஒரு நேரத்தில் பல Facebook கணக்குகளை கையாளவேண்டிய சந்தர்ப்பத்தில் குரோமின் வலதுபக்க மேல் மூலையில் Facebook பட்டனின் மேல் கிளிக் செய்யவும். இப்போ உங்கள் Facebook கணக்குகளுக்கான  நீங்கள் சேமித்த பெயர்ப்பட்டியல் தோன்றும். இதிலிருந்து தேவையான கணக்குகளை கிளிக்பண்ணி பயன்படுத்திக் கொள்ளவேண்டியதுதான்.....


0 Response to "ஒரே நேரத்தில் ஒரு உலாவியில் பல Facebook கணக்குகளை எவ்வாறு பயன்படுத்துதல்?"

Post a Comment

alternative description of the image

பிரபல இடுக்கைகள்