.

விண்டோஸ் 7 இல் மறைந்துள்ள அனைத்து THEMES களையும் செயற்படுத்திப் பயன்படுத்திக்கொள்ள..

விண்டோஸ்7 இல் வேறுபட்ட Themes களை மாற்றிப் பயன்படுத்துவதற்காக நாம் Desktop இன் ஓரிடத்தில் வைத்து Right-Click செய்து தோன்றும் விண்டோவின் கடைசியில் உள்ள “Personalize “ என்பதை தெரிவுசெய்யும்போது தோன்றும் விண்டோவில் உள்ள Themes களையே பயன்படுத்துவதுண்டு.
ஆனால் இவ் விண்டோஸ்7  இயங்குதளத்துடன் மேலும் பல நாடுகளுக்குரிய Themes கள் மறைக்கப்பட்டு இருக்கும். அவற்றையும் நாம் எப்படி எடுத்து பயன்படுத்திக் கொள்வது என்பதே இப்பதிவின் நோக்கமாகும்.

இதற்கு முதலில் உங்கள் கணணியில் உள்ள Start Button ஐக் கிளிக் செய்து அங்குள்ள Search box இல் கீழ் காட்டியவாறு கொடுத்து Enter பண்ணவும்.
                                                        
                                                        C:\Windows\Globalization\MCT


அல்லது காட்டிய ஒழுங்கில் MyComputer ஊடாகச் சென்று “MCT” ஐ அடையவும்.
இப்போ கீழ் காட்டியவாறு காணப்படும். இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு நாடுகளுக்கான விசேட Themes களாகும்.


ஒவ்வொரு Folder களையும் திறக்கும்போது அவற்றினுள்ளே Themes எனும் ஒரு Folder காணப்படும். இவற்றினை திறந்து உள்ளே உள்ள கோப்பினை Double-Click செய்துகொள்ளவும்.



இப்போ நீங்கள் தெரிவுசெய்த நாட்டுக்குரிய Themes ஆனது மாற்றமடைந்துவிடும்.
பயன்படுத்திப் பாருங்கள்.

0 Response to "விண்டோஸ் 7 இல் மறைந்துள்ள அனைத்து THEMES களையும் செயற்படுத்திப் பயன்படுத்திக்கொள்ள.."

Post a Comment

alternative description of the image

பிரபல இடுக்கைகள்