.

விண்டோஸ் 7 இல் Wallpapers களை எழுந்தமானமாக மாறச் செய்ய.


கணணியில் உள்ள Wallpaper ஐ நாம் நமக்கு விரும்பியவாறு போட்டுக்கொள்ளலாம். அதிலும் குறிப்பாக சிலர் ஒரே படத்தை தொடர்ந்து பார்த்து சலிப்புத் தட்டுவதால் அடிக்கடி மாற்றுவதுமுண்டு.
அப்படி அடிக்கடி மாற்றாமல் தன்னிச்சையாகவே படங்களை எவ்வாறு மாற்றமடையச் செய்யலாமென்று இப்பதிவினூடாகப் பார்ப்போம்.

இதற்கு நீங்கள் முதலில் உங்களுக்கு விருப்பமான போட்டோக்களை தெரிவுசெய்து அவற்றை ஒரு Folder இல் இட்டு வேண்டிய இடத்தில் சேமித்துக் கொள்ளுங்கள்.

பின்னர் Desktop இன் ஏதாவதொரு இடத்தில் வைத்து Right-Click செய்யும்போது கீழ் உள்ளவாறு தோன்றும் விண்டோவில் காட்டிய “Personalize” என்பதை தெரிவுசெய்யவும்.


இப்போ தோன்றும் பக்கத்தில் கீழே படத்தில் வட்டமிட்டுக் காட்டியவாறு உள்ள“ Desktop Background” என்பதை கிளிக் செய்யவும்.


இப்போ தோன்றும் பக்கத்தில் இலக்கம் 01 இனால் காட்டப்பட்ட “Browse” என்பதை கிளிக்செய்து நீங்கள் சேமித்துவைத்துக்கொண்ட Folder இல் உள்ள படங்களை திறந்துகொள்ளவும்.பின்னர் இலக்கம் 02 இனால் காட்டப்பட்ட “Select All “ என்பதைக் கொடுத்து அனைத்துப் படங்களையும் தெரிவுசெய்யவும்.

பின்னர் இலக்கம் 03 இனால் காட்டப்பட்ட “Picture Position”இல் “fill” என்பதைத் தெரிந்து இலக்கம் 04 இனால் காட்டப்பட்ட “Change Picture Every” என்பதில் ஒவ்வொரு படமும் எத்தனை நிமிடநேர இடைவெளியில் மாறிக்கொள்ளவேண்டுமென்பதைக் கொடுங்கள்.

பின்னர் இலக்கம் 05 இனால் காட்டப்பட்டதை தெரிவுசெய்தபின்னர் மாற்றங்களை சேமித்துக்கொள்ள வேண்டியதுதான்.

இப்போ உங்கள் விருப்பப்படி கணணியின் சுவர்ப்படங்கள் தானாகவே மாற்றமடைவதைக் காணலாம்....0 Response to "விண்டோஸ் 7 இல் Wallpapers களை எழுந்தமானமாக மாறச் செய்ய."

Post a Comment

பிரபல இடுக்கைகள்