.

இணையத்தொடர்பு [Internet Connection] இல்லாதவேளையிலும் இணையத்தளங்களைப் பார்வையிடுவதற்கு...


நாம் பொதுவாக இணையத் தளங்களைப் பார்வையிடும்போது சில பக்கங்கள் மீண்டும் தேவைப்ப்படுமெனின் அதனை புக்மார்க் [BOOK MARK] செய்துவைப்பதுண்டு. ஆனால் Book Mark செய்யும் பக்கங்களை மீண்டும் பார்ப்பதற்கு இணையத் தொடர்பை ஏற்படுத்தினாலேயே அப் பக்கத்தினுள் நாம் செல்லமுடியும். இதற்காக நாம் அப் பக்கங்களை “Save Page As” என்பதை கொடுத்து சேமித்து[Save] வைப்பதுண்டு.
ஆனால் கல்வித்தளங்கள் அல்லது வேறு முக்கியமெனக் கருதும் வலைத்தளங்களின் பெரும்பாலான பக்கங்கள் அனைத்தும் எமக்கு அடிக்கடி தேவைப்ப்படுமெனின் அவ் வலைத்தளங்களின் எல்லாப் பக்கங்களையும் Save செய்து வைப்பதால் மீண்டும் நாம் அதனைப் பார்வையிடும்போது ஒவ்வொன்றாக Open செய்து பார்க்கவேண்டும். இது நேர விரையத்தையும் எரிச்சலையும் கூட எமக்குத் தரலாம்.



எனவே இதற்கு தீர்வைத் தர பல மென்பொருட்கள் இணையத்தில் காணப்படுகின்றன. நாம் இப்போ அதில் ஒருவகையான HTTRACK  எனும் மென்பொருளின் பயன்பற்றிப் பார்ப்போம்.
இம்மென்பொருளை இணையத்திலிருந்து இலவசமாக கீழ் உள்ள இணைப்பின்மூலம் பதிவிறக்கி கணனியில் நிறுவிக்கொள்ளுங்கள்




இப்போ நிறுவுகை முடிவடைந்ததும் அதனை திறந்துகொள்ளுங்கள். இப்போ கீழ் உள்ளவாறு காணப்படும்.


இதில் “NEXT” என்பதைக் கொடுங்கள். இப்போ கீழ் உள்ள பக்கம் திறக்கும்.


இதில் “New Project Name” என்பதில் உங்களுக்கு விரும்பிய பெயர் ஒன்றினைக் கொடுங்கள். “Base Path”  என்பதில் நீங்கள் எங்கு சேமிக்கப் போறீர்களோ அவ்விடத்திற்குரிய பாதையைக்[Path] காட்டிவிடவும். பின்னர் “NEXT” என்பதைக் கொடுக்கவும். இப்போ கீழ் உள்ள பக்கம் திறக்கும்.


இதில் “ Add URL ” என்பதை கிளிக் பண்ணவும். இப்போ கீ காட்டியவாறு விண்டோ தோன்றும். இதில் “ URL “ என்பதில் உங்களுக்கு வேண்டிய இணையத்தளத்தின் முகவரியை கொடுத்து “ OK “ என்பதைக் கொடுக்கவும்.


பின்னர் அடுத்துவரும் விண்டோவில் “ NEXT ” என்பதைக் கொடுத்து இறுதியில் “ Finished ” என்பதைக் கொடுக்கவும்.



இப்போ கீழ் உள்ளவாறு இணையத்தளத்தின் அனைத்தும் பதியப்படும். முடிவடைய சற்று நேரமெடுக்கும். இவ்வேளையில் நீங்கள் இணையத்தில் வேறேதும் பற்றி அலசவேண்டியதுதான். பின்னர் செய்கை முடிவுற்றதும் “ Finished ” என்பதைக் கொடுத்து வெளியேறுக.

பின்னர் இணைய இணைப்பு இல்லாதவேளையில் சேமித்து வைத்த Folder இனுள் சென்று “ .html “  இல் உள்ள  File Open செய்து படிக்கவேண்டியதுதான்.
இணையத் தொடர்பு உள்ளவேளை இணையத்தளம் ஒன்றினுள் அலசுவது போன்ற உணர்வு உங்களுக்கு ஏற்படும். இது வீடுகளில் இணையவசதி இல்லாதவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகும்.


0 Response to "இணையத்தொடர்பு [Internet Connection] இல்லாதவேளையிலும் இணையத்தளங்களைப் பார்வையிடுவதற்கு..."

Post a Comment

alternative description of the image

பிரபல இடுக்கைகள்