.

வைரஸ் தாக்கத்தால் மறைக்கப்பட்ட கோப்புக்களை மீளப் பெறமுடியவில்லையா?

உங்கள் கணணியில் ஏற்படும் வைரஸ் தாக்கத்தால் சிலவேளைகளில் கணணியில் உள்ள கோப்புக்கள் மறைக்கப்பட்டிருக்கும். இவற்றை Folder Options சென்று “ Show hidden Folders” என்பதைத் தெரிவுசெய்தே மீளப் பார்க்கலாம். இதில் சிலவேளை “ Show hidden Folders” என்பதைத் தெரிவுசெய்தாலும் வைரஸ் தாக்கம் காரணமாக தன்னிச்சையாகவே மீண்டும் மீண்டும் ஆவணங்கள் மறைக்கப்பட்டுவிடும். இதனால் அவற்றை எப்படிப் பார்ப்பதென்று நீங்கள் எண்ணலாம். அதற்கு தீர்வாக இப்பதிவு அமையும்.

இதற்கு முதலில் Start Button இனுள் சென்று  “RUN” என்பதை கிளிக் செய்து அதனை திறந்துகொள்ளுங்கள்.

பின்னர் கீழ் காட்டிய ஒழுங்கில் சென்று SHOWALL என்பதை அடையவும்.

HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\Explorer\Advanced\Folder\Hidden\SHOWALL


இப்போ வலப்பக்கத்திலே  உள்ள CheckedValue என்பதை Double-Click  செய்து திறந்துகொள்ளவும்.
இதிலே “Value data” இல் “1”  என்றுள்ளதற்குப் பதிலாக 2 ஐக் கொடுத்து OK  பண்ணவும்.
இப்போ மறைக்கப்பட்ட கோப்புக்கள் மீளத் தென்படும்.

3 Response to "வைரஸ் தாக்கத்தால் மறைக்கப்பட்ட கோப்புக்களை மீளப் பெறமுடியவில்லையா?"

 1. Anonymous Says:
  May 1, 2012 at 7:15 PM

  Pen drive நச்சுநிரலால் மறைக்கப்பட்டுள்ள கோப்புக்களை திரும்பப் பெற வழியிருந்தால் கூறுங்கள்.

 2. Anonymous Says:
  May 5, 2012 at 5:51 AM

  உங்களுடைய பதிவுகள் பலரை சென்றடைய வேண்டுமா? உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி திரட்டியில் இணைக்கலாம். உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் subject பகுதிக்குள்ளும் உங்கள் பதிவின் சுருக்கத்தையும் அதன் இணைப்பையும் மின்னஞ்சிலின் Body பகுதிக்குள்ளும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.

 3. Admin says:
  May 6, 2012 at 11:23 AM

  உங்கள் சேவை மேலும் தொடர வாழ்த்துக்கள்

Post a Comment

பிரபல இடுக்கைகள்