.

ஜிமெயிலில் உள்ள Chat History ஐ அழிக்க.


ஜிமெயிலில் உள்ள Chat வசதியின் மூலம் நாம் எமது நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொள்ளலாம். இவ்வாறு அரட்டை அடிக்கும் விடயங்கள் அதன் History இல் காணப்படும். எனவே இன்னொரு தடவை நாம் அரட்டையை திறக்கும் போது பழைய அரட்டைகள் சிலவேளைகளில் அழியாமல் காணப்படுவதுண்டு. இவை சிலவேளைகளில் சிலருக்கு இடையூறாகக் காணப்படலாம்.
எனவே இவ் அரட்டைப் பகுதியில் உள்ள பழைய அரட்டைகளை எவ்வாறு தன்னிச்சையாகவே அழித்துக் கொள்ளவது என்று இப்பதிவினூடாகப் பார்ப்போம்.


இதற்கு முதலில் உங்கள் ஜிமெயிலில் படத்தில் காட்டியவாறு வலைப்பக்கத்தின் மேல் மூலையில் சிவப்பு வட்டமிடப்பட்ட பகுதியை கிளிக் செய்து தோன்றும் பகுதியில் உள்ள Setting இனுள் செல்லவும். இப்போ கீழ் காட்டியவாறு பக்கம் தோன்றும்.


இதிலே படத்தில் வட்டமிட்டுக் காட்டியவாறு உள்ள CHAT என்ற tab ஐ கிளிக் செய்துகொள்ளவும். இப்போ படத்தில் உள்ள “ My Chat history: “ என்பதில் இரண்டு Radio buttons காணப்படும். இதிலே “Never Save Chat History” என்பதை கொடுத்து இப்பக்கத்தின் கீழே உள்ள  Save என்பதைக் கொடுத்து சேமித்துக் கொள்ளவும். அவ்வளவும்தான் இனிமேல் உங்கள் Chat History ஆனது தன்னிச்சையாகவே அழிக்கப்பட்டுவிடும்.


1 Response to "ஜிமெயிலில் உள்ள Chat History ஐ அழிக்க."

  1. ANBUTHIL says:
    May 18, 2012 at 5:20 PM

    thank u nanba usefull post

Post a Comment

alternative description of the image

பிரபல இடுக்கைகள்