.

வலைப்பூவிற்கு எழுந்தமானமான Header Image ஐ உருவாக்குதல்.

உங்கள் வலைப்பூக்களில் எழுந்தமானமான அனிமேஷன்களைக் கொண்ட பல Widgets களை இணைத்து வலைப்பூவினை அழகுபடுத்தியிருப்பீர்கள். அதேபோல் உங்கள் வலைப்பூவின் Header Image ஆனது தனியொரு படமாக இல்லாமல் அடிக்கடி மாறுபடக்கூடிய விதத்தில் அமைந்தால் எவ்வாறிருக்கும் என எண்ணி Flash போன்ற பல மென்பொருட்களில் முயற்சித்தும் பார்த்திருப்பீர்கள். ஆனால் அதைவிட சுலபமாக எவ்வாறு நம்மிடம் இருக்கும் படங்களை வைத்து மாறுபடக்கூடிய Header Image ஐ உருவாக்கலாம் என்று இப்பதிவினூடாகப் பார்ப்போம்.

JavaScript ஐப் பயன்படுத்தி மிகவும் சுலபமான முறையில் இதனை மேற்கொள்ளலாம். ஒவ்வொரு முறையும் வலைப்பூவின் பக்கமானது Refresh அல்லது Reload செய்யும்போது Header Image ஆனது எழுந்தமானமான முறையில் மாறிக்கொள்ளும்.

இதற்கு முதலில் நீங்கள் தயார்செய்த Header Image“Photobucket.com, Imageshake.com, …….” போன்ற இலவச File Hosting Sites இல் சேமித்துக் கொள்ளவும்.(இத் தளங்களில் கணக்கு இல்லையெனின் புதிய கணக்கொன்றை ஆரம்பித்து படங்களை தரவேற்றிக்கொள்ளுங்கள்)
பின்னர், உங்கள் வலைப்பூ கணக்கைத் திறந்து பின்வரும் ஒழுங்கில் சென்று “HTML/JavaScript” ஐத் திறந்துகொள்ளுங்கள்.


Go to Template -> Page Elements -> Add a Page Element and Choose “HTML/JavaScript”

இப்போ கீழ் உள்ளதை COPY செய்து PASTE செய்யவும்.




இப்போ நீங்கள் சில மாற்றங்களை செய்யவேண்டியுள்ளது.

01) Image01URL தொடக்கம் Image06URL வரை உள்ளதில் நீங்கள் File Hosting Sites இல் சேமித்த போட்டோக்களின் URLPaste செய்யவும்.

02) இங்கு 6 Header Image கள் இடுவதற்காக தரப்பட்டுள்ளது. இதனைவிட அதிகமான Header Image களை பயன்படுத்த வேண்டுமாயின் “  banner[5]="Image06URL"என்பதில் உள்ள இலக்கங்களை அதிகரிக்குக.

அத்தோடு எத்தனை படங்களை Header Image ஆகப் பயன்படுத்துகிறீர்களோ அவ் இலக்கத்தை சிவப்பு இலக்கத்தால் கொடுக்கப்பட்டத்தில் மாற்றவும்.


அவ்வளவும் தான். உங்கள் மாற்றத்தை சேமித்துக்கொள்ளவும். இப்போ உங்கள் Header Image ஆனது எழுந்தமானமானதாக மாற்றமடையும்.

2 Response to "வலைப்பூவிற்கு எழுந்தமானமான Header Image ஐ உருவாக்குதல்."

alternative description of the image

பிரபல இடுக்கைகள்