அலுவலகங்களில் பணிபுரியும் அனைவரும் கண்டிப்பாக MS Word தெரிந்திருத்தல் வேண்டும். எனவே இதனை இலகுவாகவும் விரைவாகவும் பயன்படுத்துவதற்காக அதன் Shortcuts களை அறிந்திருத்தல் அவசியம். இதனை இலகுவாக எவ்வாறு பெறலாம் என்று இப்பதிவினூடாகப் பார்ப்போம்.
இதற்கு முதலில் நீங்கள் MS Word இனை திறந்து View Tap கிளிக் செய்து அதிலே “ Macros “ என்ற பகுதியை கிளிக் செய்யுங்கள்.
இப்போ உங்களுக்கு கீழே உள்ளவாறு ஒரு விண்டோ திறக்கும். இதிலே காட்டியவாறு “ Word Commands “ என்பதை தெரிவு செய்யவும்.
இப்போ தோன்றிய பட்டியலுக்குள் “ List Commands “ என்பதை தெரிவுசெய்து RUN என்பதைக் கொடுக்கவும். இப்போ சிறிய ஓர் விண்டோ திறக்கும். இதனை OK பண்ணவும்.
அவ்வளவுந்தான்; உங்களுக்கு தேவையான Shortcuts அனைத்தும் Print Format இல் தயாராகிவிடும். இனி Print வடிவில் இலகுவாகப் பெறவேண்டியதுதான்...
July 29, 2012 at 6:20 AM
மிகவும் தேவைப்படும். பகிர்வுக்கு நன்றி.