.

தன்னிச்சையாகவே கணணித்திரை புதுப்பிக்க(Automatic Screen Refresh)


நீங்கள் உங்கள் கணணியில் உள்ள file system இல் மாற்றத்தை ஏற்படுத்தியபின்னர் அல்லது Explorer ஐப் பயன்படுத்துகின்ற போது மாற்றம் செய்கின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் F5 Key ஐ அழுத்தியோ அல்லது Right Click செய்து Refresh செய்யும்போதே நீங்கள் செய்த மாற்றத்தை அறிந்துகொள்ள முடியும். அவ்வாறில்லாமல் தன்னிச்சையாகவே எவ்வாறு Refresh செய்துகொள்ளலாம் என்று இப்பதிவூடாகப் பார்ப்போம்.

இதற்கு முதலில் Start Menu இல் சென்று RUN இல் “ regedit “ என்பதை கொடுத்து OK பண்ணுங்கள். இப்போ உங்களுக்கு கீழ் உள்ளவாறு Registry Editor தோன்றியிருக்கும்.


இப்போ கீழ் காட்டிய ஒழுங்கில் Update வரை செல்லவும்.

HKEY_LOCAL_MACHINE\System\CurrentControlSet\Control\UpdateMode 

இப்போ வலது பக்கத்தில் உள்ள DWORD என்பதை கிளிக் செய்து அதில் உள்ள Data Value என்பதில் 1 இற்கும் 5 இற்கும் இடையில் விரும்பிய இலக்கத்தை  மாற்றியபின் சேமித்துக் கொள்ளவும். பின்னர் கணணியை மீளியக்கவும்.

அவ்வளவுந்தான். இனி ஏதும் மாற்றம் ஏற்படுத்தியபின்னர் தன்னிச்சையாகவே கணணித் திரையானது Refresh ஆகும்.3 Response to "தன்னிச்சையாகவே கணணித்திரை புதுப்பிக்க(Automatic Screen Refresh)"

 1. திண்டுக்கல் தனபாலன் says:
  September 24, 2012 at 6:17 PM

  புதிய தகவல்... மிக்க நன்றி...

 2. ARIVU KADAL says:
  September 24, 2012 at 9:49 PM

  பயனுள்ள தகவல் மிக்க நன்றி

 3. tharshikan sivapprakasam says:
  May 26, 2013 at 7:48 PM

  ``தங்கள் அருமையான பதிவுகளை TamilBM( http://tamilbm.com/ ) திரட்டியிலும் இணையுங்கள்.

Post a Comment

பிரபல இடுக்கைகள்