.

தன்னிச்சையாகவே கணணித்திரை புதுப்பிக்க(Automatic Screen Refresh)


நீங்கள் உங்கள் கணணியில் உள்ள file system இல் மாற்றத்தை ஏற்படுத்தியபின்னர் அல்லது Explorer ஐப் பயன்படுத்துகின்ற போது மாற்றம் செய்கின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் F5 Key ஐ அழுத்தியோ அல்லது Right Click செய்து Refresh செய்யும்போதே நீங்கள் செய்த மாற்றத்தை அறிந்துகொள்ள முடியும். அவ்வாறில்லாமல் தன்னிச்சையாகவே எவ்வாறு Refresh செய்துகொள்ளலாம் என்று இப்பதிவூடாகப் பார்ப்போம்.

இதற்கு முதலில் Start Menu இல் சென்று RUN இல் “ regedit “ என்பதை கொடுத்து OK பண்ணுங்கள். இப்போ உங்களுக்கு கீழ் உள்ளவாறு Registry Editor தோன்றியிருக்கும்.


இப்போ கீழ் காட்டிய ஒழுங்கில் Update வரை செல்லவும்.

HKEY_LOCAL_MACHINE\System\CurrentControlSet\Control\UpdateMode 

இப்போ வலது பக்கத்தில் உள்ள DWORD என்பதை கிளிக் செய்து அதில் உள்ள Data Value என்பதில் 1 இற்கும் 5 இற்கும் இடையில் விரும்பிய இலக்கத்தை  மாற்றியபின் சேமித்துக் கொள்ளவும். பின்னர் கணணியை மீளியக்கவும்.

அவ்வளவுந்தான். இனி ஏதும் மாற்றம் ஏற்படுத்தியபின்னர் தன்னிச்சையாகவே கணணித் திரையானது Refresh ஆகும்.



2 Response to "தன்னிச்சையாகவே கணணித்திரை புதுப்பிக்க(Automatic Screen Refresh)"

  1. திண்டுக்கல் தனபாலன் says:
    September 24, 2012 at 6:17 PM

    புதிய தகவல்... மிக்க நன்றி...

  2. ARIVU KADAL says:
    September 24, 2012 at 9:49 PM

    பயனுள்ள தகவல் மிக்க நன்றி

Post a Comment

alternative description of the image

பிரபல இடுக்கைகள்