.

Notepad இல் உள்ள அனைத்தையும் ஒரு Click இல் Copy பண்ண .


Notepad இல் உள்ள விடயங்கள் அனைத்தையும் MS Word இற்கு கொண்டுவரவேண்டிய சந்தர்ப்பம் ஒன்று வரும்வேளை நாம் பொதுவாக Notepad ஐ திறந்து அதில் உள்ள விடயங்கள் அனைத்தையும் தெரிவுசெய்து பின்னர் Copy செய்து பின்னரே அதனை MS Word இல் Paste செய்வதுண்டு. ஆனால் அவ்வாறில்லாமல் Windows7 இலே சுலபமாகவும் நேரத்தை மிச்சப்படுத்தக் கூடிய விதமாகவும் Right Click Menu இல் ஓர் மேலதிக வசதியொன்று உள்ளது. இதனை எவ்வாறு மேற்கொள்ளலாம் என்று இப் பதிவினூடாகப் பார்ப்போம்.

முதலில் Registry Editor ஐத் திறந்துகொள்ளவும்.
பின்னர் கீழ் காட்டிய ஒழுங்கில் சென்று Shell என்பதை அடையவும்.
HKEY_CLASSES_ROOT\txtfile\shell

இப்போ கடந்தபதிவில் கூறியதுபோன்று  Shell என்பதில் வைத்து Right Click செய்து புதிய Key ஒன்றை உருவாக்கிக் கொள்ளவும். இதற்கு “ Copy To Clipboard “ என பெயர்மாற்றம் செய்துகொள்ளவும்.

இப்போ வலது பக்கத்தில் உள்ள DefaultRight Click செய்து Modify என்பதைக் கொடுத்து Value data என்பதில் Copy the contents to clipboard “ என்றவாறு கொடுக்கவும்.

இப்போ மீண்டும் Copy To Clipboard  என்பதில் வைத்து புதிய Key ஒன்றை உருவாக்கிக் கொள்ளவும். இதற்கு  “ Command  “ என பெயர்மாற்றம் செய்துகொள்ளவும்.


இப்போ  மீண்டும் அதேபோல் வலது பக்கத்தில் உள்ள DefaultRight Click செய்து Modify என்பதைக் கொடுத்து Value data என்பதில்
cmd /c clip < “%1”    “ என்றவாறு கொடுக்கவும்.

இப்போ Registry EditorClose பண்ணியபின்னர் ஏதாவது Text File அல்லது Notepad  இன் மேல் வைத்து Right Click செய்யவும். Copy the contents to clipboardஎன்ற பதம் காணப்படும்.



இப்போ அதனைக் கிளிக் செய்யும்போது அவ் Text File அல்லது Notepad இல் உள்ள அனைத்து விடயங்களும் Copy ஆகிவிடும். இனி தேவையான மற்றைய Text Editor இல் Paste செய்யவேண்டியதுதான்...




1 Response to "Notepad இல் உள்ள அனைத்தையும் ஒரு Click இல் Copy பண்ண ."

  1. திண்டுக்கல் தனபாலன் says:
    October 28, 2012 at 10:53 PM

    பயனுள்ள தகவல்... நன்றி...

Post a Comment

alternative description of the image

பிரபல இடுக்கைகள்