நாம் பலரும் Facebook, Twitter போன்ற சமூக வலைத்தளங்களைப்
பயன்படுத்துகின்றபோதும் அவற்றை சில முக்கிய தேவைகளுக்கு பயன்படுத்துவதில்லை. கிரிக்கட்
நடைபெறும் காலங்களில் அதனைப் பார்க்க வசதியில்லாத நேரத்தில் ஆட்ட நிலவரம் பற்றி அறிவதற்காக
எவ்வளவு துடிப்புடன் இருக்கின்றார்கள். இவ்வாறானவர்களுக்காய் இலவசமாக எவ்வாறு
மொபைலுக்கு ஆட்ட நிலவரத்தைப் பெற்றுக்கொள்வது என்று இப் பதிவினூடாகப் பார்ப்போம்.
இதற்கு முதலில் www.twitter.com இல்
சென்று உங்கள் கணக்கினுள் நுழைந்துகொள்ளுங்கள். இல்லாதவர்கள் புதிதாக ஒரு கணக்கைத்
திறந்துகொள்ளுங்கள்.
இப்போ கீழ் காட்டியவாறு Settings இனுள்
செல்லவும்.
கீழ் காட்டியவாறு பக்கம் தோன்றும் இதிலே Mobile
என்பதைத் தெரிவுசெய்யவும். இப்போ வலப்பக்கத்திலே உள்ளவாறு நாட்டினைத் தெரிவுசெய்து
கீழ் உள்ளதை பூரணப்படுத்தியபின் “ Activate Phone “ ஐ அழுத்தவும். பின்னர் தேவையான Settings ஐ
செய்யவும்.
இப்போ கீழ் காட்டியவாறு Search என்ற இடத்தில் உங்களுக்கு தேவையானதை Type
செய்யவும். படத்தில் காட்டியவாறு அது சம்பந்தமான நிரல் ஒன்று தோன்றும். தேவையானதை
இப்போ தெரிவுசெய்யவும்.
இப்போ நான் கீழ் உள்ள பக்கத்தை தெரிவுசெய்துள்ளேன். இதிலே வலது பக்க
மேல் மூலையில் உள்ள Follow என்பதை கிளிக் செய்யவும். இப்போ அது Following
என்றவாறு மாறியிருக்கும்.
இப்போ கீழ் காட்டியவாறு மஞ்சள் வட்டத்தால் காட்டிய முக்கோணியை
கிளிக்பண்ணி அதிலே “Turn on mobile notifications” என்பதை
தெரிவுசெய்யவும்.
அவ்வளவுந்தான் இனிமேல் உங்களுக்கு கிரிக்கட்டின் உடனடிச் செய்திகள்
உங்கள் தொலைபேசிக்கு உடனுக்குடன் வரும். இதுபோலவே உங்களுக்கு விரும்பியவற்றை Follow பண்ணி மேலுள்ளது போல் தொடரவேண்டியதுதான்...
October 8, 2012 at 8:13 PM
பலருக்கும் உதவும் பகிர்வு... நன்றி...