.

E-mail இல் இருந்துகொண்டே Facebook, Twitter போன்றவற்றை கையாள.


அலுவலகங்களில் பணிசெய்யும் வேளைகளில் Facebook, Twitter போன்ற சமூக வலைத்தளங்களை கையாள்வது கடினமாகும். எனவே அவ்வாறான வேளைகளில் மின்னஞ்சலைப் பயன்படுத்தும் சந்தர்ப்பங்களில் அதனூடாக இலகுவாகும் மற்றவர்களுக்கு தெரியாமலும் இச் சமூகவலைத்தளங்களை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று இப்பதிவினூடாகப் பார்ப்போம்.

Firefox, Chrome உலாவிகளிலே இந்த வசதியைப் பயன்படுத்த முடியும். கீழ் உள்ள இணைப்புக்களின் மூலம் நீட்சியைத் தரவிறக்கிக் கொள்க.


குரோம் நீட்சி மூலமாக செயற்படுத்தும் முறையை உதாரணமாகப் பார்ப்போம். இதேபோலவே Firefox நீட்சிக்குமான செயற்பாடுமாகும்.
மேல் உள்ள குரோமிற்கான நீட்சியை கிளிக் பண்ணும்போது கீழுள்ள படத்தில் காட்டியவாறு பக்கம் தோன்றும்.



இப்போ இதிலே “ADD TO CHROME” என்பதை கிளிக் செய்யவும். இப்போ கீழ் உள்ளவாறு விண்டோ ஒன்று தோன்றும்.



இதிலே Add என்பதைக் கொடுக்கவும். இப்போ உங்கள் உலாவிக்குரிய நீட்சியானது தரவிறக்கப்பட்டு சேர்க்கப்பட்டுவிடும். இப்போ உங்களுக்கு கீழ் உள்ளவாறு பக்கம் தோன்றும்.



இதிலே தரப்பட்ட இடைவெளியில் உங்கள் E-mail ID ஐக் கொடுத்து “Send” என்ற பொத்தானை அழுத்தவும். இப்போ உங்கள் ஈமெயில் கணக்குடன் Facebook, Twitter கணக்குகள் இணைக்கப்பட்டுவிடும்.

இப்போ உங்கள் மின்னஞ்சல்கணக்கினுள் நுழையுங்கள். மேல் உள்ள படத்தில் காட்டியவாறு காணப்படும். இல்லையேல் உங்கள் உலாவியை மீள ஒருமுறை இயக்கவும்.


இதிலே அம்புக்குறியால் காட்டப்பட்டதை கிளிக் செய்யும்போது காட்டப்பட்டவாறு நிரல் தோன்றும். இதிலே Power Inbox ஆனது எவ்விடத்தில் அமையவேண்டுமோ அவ்விடத்தை தெரிவுசெய்யவும்.
நான் Side Bar ஐத் தெரிவுசெய்துள்ளேன். இப்போ வலப்பக்கத்தில் தோன்றியுள்ளது.

இதிலே தேவையானதை தெரிவுசெய்தால் அதன் மேலே Shortcut Icon ஆகத் தோன்றும்.



இப்போ மேலுள்ள படத்தில் காட்டியவாறு தேவையான சமூக வலைத்தளத்துக்குரிய பொத்தானை கிளிக்செய்து பயன்படுத்த வேண்டியதுதான்.

முதலில் பயன்படுத்தும்போது Log in செய்தால் போதும்.
இனியென்ன அலுவலகங்களில் மின்னஞ்சல் பயன்படுத்துவது போன்ற பாணியில் சமூகவலைத்தளங்களை பயன்படுத்த வேண்டியதுதான்.




1 Response to "E-mail இல் இருந்துகொண்டே Facebook, Twitter போன்றவற்றை கையாள."

  1. திண்டுக்கல் தனபாலன் says:
    November 19, 2012 at 8:02 AM

    பயனுள்ள தகவலுக்கு நன்றி... படத்துடன் விளக்கம் அருமை...

Post a Comment

alternative description of the image

பிரபல இடுக்கைகள்