நீங்கள் சில வேளைகளில் சில தேவைகளுக்காக உங்கள் கணணியின் மொழியினை மாற்றியிருக்கவேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் மீண்டும் கணணியினை இயக்கும் வேளையிலே கடவுச் சொல் பிழை என்ற செய்தியே தோன்றியிருக்கும். அத்தோடு நீங்கள் மாற்றிய மொழித் தெரிவும் கூடவே அருகில் காணப்படும். ஆனால் அதனை வேறு மொழிக்கு மாற்ற இயலாமல் கூட இருந்திருக்கும். இந்நிலையில் இயங்குதளத்தை மீண்டும் ஒருமுறை மீள நிறுவுவதே ஒரே வழி எனக் கூட எண்ணியிருக்கலாம். ஆனால் அதற்கு ஒரு தீர்வு இப் பதிவினூடாக...
இவ்வாறானதொரு சந்தர்ப்பம் அலுவலகத்தில் உள்ள கணணி ஒன்றுக்கு நேர்ந்தது. பலமுறை முயன்றும் கைகூடவில்லை. இணையத்தில் அலசியவேலையில் பெரும்பாலானவர்கள் Safe Mode இனுள் சென்று பின்னர் கடவுச் சொல்லை மாற்றலாம் என கருத்துக்கள் தெரிவித்திருந்தனர். ஆனால் Safe Mode இனூடாகச் சென்றபோதும் அதே பிரச்சனையே காணப்பட்டது.
கடைசியில் ஒரு வழி கிடைத்தது. அதாவது Key Board இன் வலது பக்கத்தில் உள்ள “ Shift + Alt “ Keys ஐ அழுத்தும்போது நாம் தெரிவுசெய்துள்ள மொழிகள் ஒவ்வொன்றாக மாறும்.
இப்போ நீங்கள் ஆங்கிலத்தை தெரிவுசெய்துவிட்டு கடவுச் சொல்லைக் கொடுக்கவேண்டியதுதான். உங்கள் கணக்கினுள் செல்லலாம்.
உங்களுக்கும் இவ்வாறான சந்தர்ப்பம் ஏற்பட்டால் இம்முறையை முயற்சித்துப் பாருங்கள். இயங்குதளத்தை மீள நிறுவவேண்டிய சந்தர்ப்பம் ஏற்படாது.
August 13, 2012 at 6:41 PM
இதுவரை ஏற்பட்டதில்லை நண்பரே...
பயன் தரும் பகிர்வு... சேமித்து வைத்துக் கொண்டேன்...
தொடருங்கள்...வாழ்த்துக்கள்... நன்றி…
அப்படிச் சொல்லுங்க...! இது என் தளத்தில் !
November 3, 2012 at 11:16 AM
நண்பரே,
தங்களின் பதிப்பு மிகவும் அருமை. தங்களின் இந்த அருமையான பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள நமது தமிழ் களஞ்சியத்தில் பகிருங்கள். வாழ்க தமிழ் வளர்க தமிழ் பற்று.
http://www.tamilkalanchiyam.com
- தமிழ் களஞ்சியம்
November 4, 2012 at 4:37 PM
thanks for this usefull information
November 18, 2012 at 1:33 PM
Thanks for this very Hided informations....
November 18, 2012 at 1:34 PM
Thanks for this usefullll hided information for best.....