.

Team Viewer - உங்கள் கணணியை தொலைவிலுள்ள இன்னொருவர் கணணியிலிருந்து இயக்க.



நாம் கணணியை நீண்ட காலம் பயன்படுத்தி வந்தாலும் அதில் ஏற்படும் எல்லாப் பிழைகளையும் (வன்பொருள் அல்லது மென்பொருள் [Hardware/ Software] ரீதியான) எம்மால் சீர்செய்து கொள்ள முடிவதில்லை. இவ்வாறான வேளையிலேயே நாம் மற்றவரை நாடுவதுண்டு. அதிலும் சிலருக்கு பொதுவாக பெண்களுக்கு தமது நண்பர்களாயிருந்தால்  வீட்டில் அழைத்து அப் பிரச்சனையை சரிசெய்வது என்பது சற்று கடினமானதே. அதேவேளை தெரிந்த உறவினர் இருப்பினும் வேறு நாட்டில் வசித்தால் எப்படி அப் பிரச்சனையை தீர்ப்பது என்று கவலைப்படுவதுமுண்டு.

ஆனால் இப்போ இணைய வசதி இல்லாதவர்களின் வீடே இல்லையெனலாம். அப்படியிருக்க எமக்கேன் இவ்வாறான கவலை..? இருக்கவே இருக்கின்றது ரீம் வியுவர்(TeamViewer) எனும் மென்பொருள்.



TeamViewer மூலம் ஒரு கணினி வலையமைப்பில் அல்லது இணையத்தில் இணைந்திருக்கும் உலகின் எப்பகுதியிலுமுள்ள ஒரு கணினியை உங்களது கணினி மூலம் அணுகி அதனை இயக்கலாம்.


உங்கள் கணினியின் முகப்புத்திரையை(Desktop) மறுமுனையில் இருப்பவருக்கும் அதேபோல் அவரது கணினியின் முகப்புத்திரையை(Desktop) உங்கள் கணினிலும் தோன்றச் செய்யலாம்.. இதன் மூலம் நாம் அதிக கொள்ளளவு(Capacity) கொண்ட பைல்களையோ படங்களையோ அல்லது வேறு ஏதும் செய்முறைகோப்புக்களையோ(Presentations) தொலைவிலுள்ளவருக்குக் கணப்பொழுதில் காண்பிக்கவும் பரிமாறிக் கொள்ளவும் முடியும். தொலைவிலுள்ள நண்பரைக் கொண்டு உங்கள் கணினியில் ஏற்பட்டுள்ள வன்பொருள் மற்றும் மென்பொருள் சிக்கலை அவரிடத்திற்கு நேரில் செல்லாமல் உங்கள் வீட்டிலிருந்தபடியே சரி செய்தும் கொள்ளலாம்.



இவ் TeamViewer ஆனது இணையத்திலிருந்து பதிவிறக்கி(Download) நிறுவிக்(Install) கொண்டபின் இலகுவாக பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்காக அதிகளவு கஷ்டப்படவேண்டிய தேவையில்லை. ஆனால், இம் மென்பொருளை பயன்படுத்த இரண்டு முனைகளிலும் TeamViewer நிறுவி இணையத் தொடர்பில் இருக்க வேண்டும். அப்போது உங்கள் கணினிக்கென ஒரு இலக்கமும் கடவுச்சொல்லும்(Password) தரப்படும். எதிர் முனையிலும் அவ்வாறே தரப்படும். இந்த லொகின்(Login) விவரங்களை இரண்டு கணினிகளிலும் பரிமாறிக் கொண்ட பின் இணைப்பை உருவாக்கி நீங்கள் விரும்பும் வசதியை உடனே செயற்படுத்த முடியும்.


TeamViewer6 இது 2.9 எம்பி அளவு மட்டுமே கொண்டது. இதனை  கீழ உள்ளதை கிளிக் பண்ணி பதிவிறக்கிக்  கொள்ளலாம்.

இனியென்ன, கணனியில் ஏதும் சந்தேகமேனின் TeamViewer மூலம் வீட்டில் இருந்தவாறே நண்பரை நாடவேண்டியதுதானே...



0 Response to "Team Viewer - உங்கள் கணணியை தொலைவிலுள்ள இன்னொருவர் கணணியிலிருந்து இயக்க."

Post a Comment

alternative description of the image

பிரபல இடுக்கைகள்