.

கணனியில் நிறுவியுள்ள அனைத்து Driver களையும் BACK UP எடுத்துக்கொள்ள.


அலசல்கள்1000  இன் கடந்தவொரு பதிப்பிலே விண்டோஸ் இயங்குதளம் நிறுவவேண்டிய தேவையேற்படும்போது Driver Cd இல்லாதுவிட்டால் எவ்வாறு அதனை இணையத்தளத்திலிருந்து பெற்றுக்கொள்வது என்பதுபற்றி அலசியிருந்தோம். இதனை படிக்க இங்கு சொடுக்கவும்.
ஆனால், இப்போ அதனையும்விட சற்று முன்னகர்ந்து; ஒவ்வொரு Driver களையும் தரவிறக்கிக் கொள்வதற்குப் பதிலாக எமது கணனியில் நிறுவப்பட்டிருக்கும் அனைத்து Driver களையும்  அப்படியே எவ்வாறு BACK UP எடுத்து மீண்டும் நிறுவிக்கொள்வது என்பது பற்றி பார்ப்போம்.


இதற்கு நீங்கள் முதலில் கீழ் உள்ள இணைப்பை சொடுக்கி மென்பொருள் ஒன்றினை தரவிறக்கி கணனியில் நிறுவிக்கொள்ளவும்.
               
பின்னர் அதனைத் திறந்துகொள்ளவும். இப்போ கீழ் உள்ளவாறு விண்டோ காணப்படும்.

இதில் Scan Current System ” என்ற Button ஐ கிளிக் செய்யவும். இப்போ அதில் நம் கணினியில் நிறுவியிருக்கும் அனைத்து  Driver மென்பொருள்களும் நமக்கு தென்படும். இதில் எதெல்லாம்
நமக்கு தேவையோ அத்தனையையும் தேர்வுசெய்து Backup now “ என்ற Button அழுத்தி நீங்கள் விரும்பும் பகுதியில் BACK UP செய்த Driver மென்பொருள்களை சேமித்துக்கொள்ளவும்.
பின்னர் அதனை விண்டோஸ் இயங்குதள நிறுவுகையின் பின்னர் நிறுவிக்கொள்ள வேண்டியதுதான்.

2 Response to "கணனியில் நிறுவியுள்ள அனைத்து Driver களையும் BACK UP எடுத்துக்கொள்ள."

  1. மதுரை சரவணன் says:
    February 23, 2011 at 12:22 AM

    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  2. alasalkal1000 says:
    February 23, 2011 at 12:33 AM

    நன்றி நண்பா...
    உங்களைப்போன்று ஆர்வமூட்டுபவர்கள் இருக்கும்வரை ஆர்வமுள்ளோரும் முன்னேறுவார்கள்.

Post a Comment

alternative description of the image

பிரபல இடுக்கைகள்