.

உங்கள் கணணியில் மென்பொருட்கள் எதுவுமின்றி விரும்பத்தகாத தளங்களுக்குச் செல்வதைத் தடுக்க [ Block Any Site In Your Computer ]


இணையத் தொடர்பு உள்ள உங்கள் கணணியில் விரும்பத்தகாதது எனக் கருதப்படும் தளங்களுக்கு சிறுவர்களோ அல்லது உங்கள் ஏனைய உறவினர்கள் அல்லது நண்பர்களோ செல்வதைத் தடுப்பதற்காக மென்பொருட்கள் எவற்றின் உதவியும் இல்லாமல் எவ்வாறு மேற்கொள்வது என்பது பற்றியதே இன்றைய இடுகையின் நோக்கமாகும்.
 இதற்காக நீங்கள் சிறியதொரு செய்கையை மேற்கொண்டால் போதும்.
முதலில் கீழே காட்டப்பட்ட பாதை ஒழுங்கில் “etc“ என்ற இடம்வரை செல்லவும்.
 
My Computer à C Drive à WINDOWS à system32 à drivers à etc
 [ C:\WINDOWS\system32\drivers\etc ]
இப்போ “etc“ என்றதில் "HOSTS" எனும் ஒரு கோப்பு [file] காணப்படும்.
இதனை Double Click செய்து அல்லது Right Click செய்தோ ஒரு NotePad இல் திறந்துகொள்ளுங்கள்.
இப்போ இவ் NotePad இன் இறுதியில் "127.0.0.1 localhost" என்பது காணப்படும். இதன் கீழே நீங்கள் தடைசெய்ய விரும்பும் தளத்திற்கான முகவரியை 127.0.0.2 என்ற இலக்கத்திற்குப் பின்னால் கொடுக்கவும்.
உதாரணத்திற்கு கீழே பார்க்கவும்.
127.0.0.1 localhost
127.0.0.2 www.blockedsite.com
இவ்வாறே மேலும் பல தளங்களைச் சேர்க்க விரும்பினால் 127.0.0.2 என்ற எண்ணில் உள்ள இறுதி இலக்கத்தை ஒவ்வொன்றாக அதிகரித்து எழுதவேண்டியதுதான்.
உதாரணத்திற்கு கீழே பார்க்கவும்.
127.0.0.1 localhost
127.0.0.2 www.blockedsite01.com
127.0.0.3
www.blockedsite02.com
127.0.0.4
www.blockedsite03.com

பின்னர், “Save” என்பதைக் கொடுத்து அவ் NotePad ஐ சேமித்துக்கொள்க.
இனிமேல் உங்கள் கணணியானது விரும்பத்தகாத இணையத்தளங்களுக்கு செல்வதை தடைசெய்யும்.
3 Response to "உங்கள் கணணியில் மென்பொருட்கள் எதுவுமின்றி விரும்பத்தகாத தளங்களுக்குச் செல்வதைத் தடுக்க [ Block Any Site In Your Computer ]"

 1. Anonymous Says:
  April 25, 2011 at 12:06 AM

  மிகவும் தேவையான நல்லதொரு பதிவு அண்ணா...

 2. "என் ராஜபாட்டை"- ராஜா says:
  July 7, 2011 at 5:50 PM

  வலைசரத்தில் உங்களை பற்றி எழுதி உள்ளேன் நேரம் இருந்தால் பார்க்கவும்

  @#$%^&*}ㄖɍ╓ȣ - என்ன ஒன்னுமே புரியலயா? அப்ப இதுதான் தொழில் நுட்பம்.

 3. sathis says:
  August 9, 2011 at 10:54 PM

  தேவையான தகவல்

Post a Comment

பிரபல இடுக்கைகள்