வலைப்பூவிலே[Blogspot] விடுமுறை காலத்தில் பதிவிடுவது பற்றி யாவருமே அறிந்திருப்பீர்கள். அதுபோலவே இன்று நாம் எமது முகப்புத்தகக் கணக்கில்[ FaceBook ] எவ்வாறு குறிக்கப்பட்ட எதிர்காலத்தில் எமது நிலையை[ Status ] பதிவிடுவது என்று பார்ப்போம்.
நண்பர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிக்கவோ அல்லது ஏதேனும் பிற விடயங்களை சுவர்ப்பக்கத்தில்[ wall paper ] எதிர்காலத்தில் பிரசுரிக்கவேண்டிய தேவை ஏற்படும்போது சிலவேளைகளில் நாம் அதனை மறந்தோ அல்லது இணையத்தொடர்பு அற்றவர்களாகவோ இருக்கலாம். இவ்வாறான சந்தர்ப்பங்களில் அதனை நிறைவேற்ற இப்பதிவு பெரிதும் உதவும் என நம்புகின்றேன்.
இதற்காக உதவி செய்யும் இணையத்தளங்கள் மூன்றை தங்களுக்காக பகிர்ந்துகொள்கின்றேன்.
01] LATER BRO
இத் தளமானது பிரபல்யமான சமூகத் தளங்களான Facebook Twiteer போன்றவற்றில் விடுமுரைக்காலப் பதிவை இடப்பயன்படுகின்றது. இத் தளத்தில் உள்ள முக்கியமான விடயம் என்னவென்றால் நாம் இப்பயன்பாட்டை பெற்றுக்கொள்ள அத்தளத்தில் புதிய கணக்கேதும் ஆரம்பிக்கத் தேவையில்லை.
02] SENDIBLE
இத் தளமானது மிக விரைவானதும் அத்துடன் பல சமூகத் தளங்களின் பல தொழிற்பாடுகளையும் செய்யக்கூடியது.
03] SOCIAL TOMORROW
இத் தளமும் சிறப்பான சேவையை வழங்கினாலும் குறிப்பிட்ட நேரத்துள் பத்திற்கு குறைவான செய்திகளையே சேமித்து வைக்கக்கூடியதாய் உள்ளது. மேலதிக சேவையைப் பெறவேண்டின் உறுப்பினராக வேண்டும்.
இனியென்ன? விடுமுறைக்கு இணையத்தொடர்ப்பில்லாத வெளியிடத்துக்குச் சென்றாலும் தவறாது உங்கள் நிலையை நண்பர்களுடன் பகிரவேண்டியதுதானே....?
0 Response to "சமூக வலைத்தளங்களில் விடுமுறைக்கால பதிவை பதிவிட..."
Post a Comment