.

Select default operating system for startup


எமது கணனிகளில் சில தேவைகளின் நிமித்தம் நாம் ஒன்றுக்கு மேற்பட்ட இயங்குதளங்களை நிறுவிப் பயன்படுத்துவதுண்டு. இவ்வாறான சந்தர்ப்பங்களில் கணணியை இயக்க ஆரம்பிக்கும்போது வேறு இயங்குதளங்கள் இயங்க ஆரம்பித்துவிடும்.
அதாவது Windows OS பயன்படுத்தும் நீங்கள் வேறு சில தேவை கருதி Linux OS நிறுவியிருப்பீர்கள். மீண்டும் கணணியை இயக்கும்வேளை எந்த இயங்குதளத்தைப் பயன்படுத்தப் போகின்றீர்கள் என்பதை தெரிவுசெய்யவேண்டும். ஆனால், தெரிவுசெய்வதை மறந்துபோய் இருந்தீர்களானால் மற்றைய இயங்குதளம் இயங்க ஆரம்பித்துவிடும். எனவே மீண்டும் கணணியை Resert செய்யவேண்டி ஏற்படும்.

எனவே இவ்வாறான அசெளகரியங்கள் ஏற்படுவதை தவிர்த்து கணணியை இயக்கும்போது எந்த இயங்குதளம் இயல்பாகவே ஆரம்பிக்கவேண்டும் என்பதை மென்பொருட்கள் எதுவுமின்றி எவ்வாறு செய்வது என்பது பற்றிப் பார்ப்போம்.
முதலில் My Computer ஐத் திறந்து அதிலே Right Click செய்து “Propertise” என்பதனை தெரிவுசெய்யவும்.
அங்கு Advanced என்ற Tab ஐ தெரிவுசெய்து அங்கு “Startup and Recovery” என்பதில் உள்ள Setting ஐ கிளிக் செய்யவும்.

Default Operating System என்பதில் உங்களுக்கு இயல்பாகவே திறக்கக்கூடிய இயங்குதளத்தை கொடுக்கலாம். அத்துடன் எவ்வளவு நேரத்தின் பின்னர் அவ் இயங்குதளம் திறக்கவேண்டும் என்பதையும் கொடுத்தால் போதும்.
இனிமேல் பல இயங்குதளங்கள் நிறுவியுள்ள வேளையில் இவ்வாறான அசெளகரியங்கள் ஏற்படுவதை தவிர்த்து உங்கள் விருப்பப்படி இயங்குதளத்தை இயக்கிக் கொள்ளலாம்.



3 Response to "Select default operating system for startup"

  1. Anonymous Says:
    May 17, 2011 at 11:17 PM

    எனது பிரச்னையை தீர்த்துவைத்தமைக்கு மிக்க நன்றிகள்.....

  2. கவிதை வீதி... // சௌந்தர் // says:
    May 20, 2011 at 2:31 PM

    பயனுள்ள தகவல் நண்பரே...

  3. alasalkal1000 says:
    May 20, 2011 at 9:32 PM

    மிக்க மிக்க நன்றி தோழரே.......
    எனது பதிவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து விருப்புப் பதிவாக தங்கள் தளத்தில் இணைத்தமைக்கு நன்றிகள்....

Post a Comment

alternative description of the image

பிரபல இடுக்கைகள்