.

தங்கள் கணணி இயங்க ஆரம்பிக்கும்போது பயனாளர்களுக்கு அறிவுறுத்தலை வழங்குவதற்கு....


தலைப்பு சற்று புரியவில்லையா? என்ன குழப்பம்? கவலையை விடுங்கள்... அதாவது நீங்கள் உங்கள் சொந்தப் பாவனையில் உள்ள கணணியை உங்கள் நேரடிக் கண்காணிப்பின் கீழேயே பிறரைப் பயன்படுத்த அனுமதிப்பது வழமை. ஏனெனில் தாங்கள்; தங்கள் கணணிமேல் வைத்துள்ள கவனிப்பு மற்றும் அக்கறை போல் மற்றைய விருந்தாளிகள் வைத்திருக்க மாட்டார்கள் என்பது அனைவரும் தெரிந்ததே.
கணணி வைத்திருக்கும் அனைவருக்கும் ஏற்படும் பொதுவான பிரச்சனை என்றால் வைரஸ் ஆகத்தான் இருக்கும். எனவேதான் நாம் Pen Drive போன்றவற்றை பாவிக்கும்போது வைரஸ் எதிர்ப்பான்களைக் கொண்டு நன்கு சோதித்தபின் அவற்றைப் பயன்படுத்துகின்றோம்.

நாம் இல்லாதவேளையில் இன்னொருவர் நமது கணணியைப் பாவிப்பதற்காக அனுமதி வழங்கும்போது பயன்படுத்துபவர் எவ்வாறான விடயங்களில் மிகுந்த அக்கறை காட்டவேண்டுமோ அவ்வாறான விடயங்களை கணணி இயங்கும் வேளையில் எவ்வாறு தெரிவிப்பது என்பது பற்றியதே இப் பதிவாகும்.
இதற்கு நீங்கள் முதலில் Start இல் சென்று RUN  என்பதை திறந்து அதிலே “ regedit”  என்று type செய்து Enter செய்யுங்கள். இப்போ உங்களுக்கு Registry Editor என்ற விண்டோ திறக்கும்.
இதிலே இடப்பக்கத்தில் கீழ் காட்டப்பட்ட ஒழுங்கில் “System” என்பது வரை செல்லவும்.
HKEY_LOCAL_MECHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\policies\system
இப்போ வலப்பக்கத்தில் உள்ள “legalnoticecaption” என்பதை Double Click செய்து திறந்துகொள்ளுங்கள். இதிலே Data Value  என்பதில் தலைப்பைக்[Heading] கொடுத்து Enter பண்ணவும்.
பின்னர் அதன் கீழே உள்ள  “legalnoticetext” என்பதைத் திறந்து அதன் Data Value  என்ற இடத்தில் தங்கள் கணணி விருந்தினர்களுக்கு என்ன செய்தி வழங்கப் போகின்றீர்களோ அதனைக் கொடுத்து Enter பண்ணவும்.
உ+ம்:  வணக்கம் நண்பர்களே! தாங்கள் Pen Drive ஐப் பயன்படுத்தும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதனை வைரஸ் எதிர்ப்பானைக் கொண்டு நன்கு சோதித்தபின் பயன்படுத்தவும். அத்துடன் தாங்கள் சேமிக்க விரும்பும் ஆவணங்களை Desktop, C: Drive தவிர்ந்த ஏனைய Drive இல் சேமிக்கவும்…..  - நன்றி-
இனிமேல் நீங்கள் கணணியை இயக்க ஆரம்பிக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மேற்குறிப்பிட்டது போன்ற செய்தியே தோன்றும். அதனை வாசித்து OK கொடுத்தபின்னரே கணணியின் Desktop தோன்றும்.



3 Response to "தங்கள் கணணி இயங்க ஆரம்பிக்கும்போது பயனாளர்களுக்கு அறிவுறுத்தலை வழங்குவதற்கு...."

  1. cheena (சீனா) says:
    May 20, 2011 at 6:18 PM

    ஆகா ஆகா - இது நன்றாக இருக்கிறதே - செஞ்சிடுவோம்ல - நல்வாழ்த்துகள் NKPS - நட்புடன் சீனா

  2. Anonymous Says:
    November 2, 2012 at 7:17 PM

    wow this is good idea
    www.topsoftdown.com

  3. Techselva says:
    November 12, 2012 at 5:48 AM

    super idea

Post a Comment

alternative description of the image

பிரபல இடுக்கைகள்