.

Facebook comments ஐ நண்பர்களுக்கு Tag செய்வது எப்படி...?

சாதாரணமாக நாம் நமது Facebook  கணக்கில் தரவேற்றம் செய்யும் படங்களையே நண்பர்களிடையே இணைத்துக் கொள்வது [ Tag ] வழமை. இதனால் நமது அனுபவங்களை நண்பர்களிடத்திலும் பகிர்ந்துகொள்வதுடன் நமது படங்களை நண்பர்கள் பார்வையிடும் சந்தர்ப்பத்தையும் அதிகரிக்கின்றோம். அத்துடன் அவர்களின் பின்னூட்டங்களையும் இதன்மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

ஆனால் இப்போ புதியவர்களுக்கு இப்பதிவு ஒருபடி முன்னேற்றத்தைத் தருமென நம்புகின்றேன். அதாவது; உங்கள் Facebook கணக்கின் பக்கத்தில் இடப்படுகின்ற பதிவுகளுக்கு நீங்கள் ஏதும் பின்னூட்டம் தெரிவித்திருந்தால் அப் பின்னூட்டத்திற்கு நண்பர்களின் கவனத்தையும் ஈர்த்து அவர்களையும் பின்னூட்டம் இட அழைப்பதற்காக நாம் அப் பதிவை அவர்களின் சுவர்ப் பக்கத்தில் இணைத்துவிடலாம்[ Tag பண்ணலாம்.]

எவ்வாறு இதனைச் செய்வது என்று இப்போ பார்ப்போம். அதாவது பதிவுகளுக்கு கீழே "Comment " என்பதை கிளிக் செய்து நீங்கள் விரும்பும் பின்னூட்டங்களை தெரிவிப்பது அனைவருக்கும் தெரிந்ததொன்றே. இப்போ Tag செய்வதற்காக " Comment" என்பதை கிளிக் செய்து பின்னர் பின்னூட்டம் இடவேண்டிய இடத்தில் " @ " என்பதை கொடுத்து அதன்பின்னே யாருக்கு Tag  செய்யப் போகின்றீர்களோ அவர்கள் பெயரை கொடுத்து Enter பண்ணினால் போதும்.



அவர்களின் சுவர்ப்பக்கத்தில் அப் பதிவு தோன்றுவதுடன் Notification பகுதியிலும் இது காணப்படும்.

முயச்சித்துப் பார்த்துவிட்டு அலசல்கள்1000  இற்கு பின்னூட்டம் இட மறந்துவிடாதீர்கள்......

0 Response to "Facebook comments ஐ நண்பர்களுக்கு Tag செய்வது எப்படி...?"

Post a Comment

alternative description of the image

பிரபல இடுக்கைகள்