.

Right Click இன்மூலம் நேரத்தை மிச்சப்படுத்த...?!!!?

Command Prompt (CMD) ஐப் பயன்படுத்தும்போது அடிக்கடி Path இனை மாற்றவேண்டிய சந்தர்ப்பம் ஏற்படும். எனவே CMD ஐப் பயன்படுத்தும் தேவையுடையோருக்காக Windows 7 இலே சுலபமாகவும் நேரத்தை மிச்சப்படுத்தக் கூடிய விதமாகவும் Right Click Menu இல் ஓர் மேலதிக வசதியொன்று உள்ளது. இதனை எவ்வாறு மேற்கொள்ளலாம் என்று இப் பதிவினூடாகப் பார்ப்போம்.


முதலில் Registry Editor ஐத் திறந்துகொள்ளவும். (உதவிக்கு இங்கு அழுத்தவும்)
பின்னர் கீழ் காட்டிய ஒழுங்கில் சென்று Shell என்பதை அடையவும்.
 HKEY_CLASSES_ROOT\Directory\shell 

இப்போ படத்தில் காட்டியவாறு Shell என்பதில் வைத்து Right Click செய்து புதிய Key ஒன்றை உருவாக்கிக் கொள்ளவும். இதற்கு “ Command Prompt “ என பெயர்மாற்றம் செய்துகொள்ளவும்.



இப்போ கீழ் காட்டியவாறு வலது பக்கத்தில் உள்ள DefaultRight Click செய்து Modify என்பதைக் கொடுத்து Value data என்பதில் “ Command Prompt  here“  என்றவாறு கொடுக்கவும்.



இப்போ மீண்டும் Command Prompt என்பதில் வைத்து புதிய Key ஒன்றை உருவாக்கிக் கொள்ளவும். இதற்கு  “ Command  “ என பெயர்மாற்றம் செய்துகொள்ளவும்.

இப்போ  மீண்டும் அதேபோல் கீழ் காட்டியவாறு வலது பக்கத்தில் உள்ள DefaultRight Click செய்து Modify என்பதைக் கொடுத்து Value data என்பதில் cmd.exe /k cd %1  “ என்றவாறு கொடுக்கவும்.



இப்போ Registry EditorClose பண்ணியபின்னர் ஏதாவது Folder  இன் மேல் வைத்து Right Click செய்யவும். “ Command Prompt here“ என்ற பதம் காணப்படும்.



பின்னர் அதனை தெரிவுசெய்யும்போது அந்த Folder இற்குரிய Path உடன் CMD திறக்கப்பட்டிருக்கும்.



இனியென்ன Path Setting நேரமும் மிச்சந்தான்...........





2 Response to "Right Click இன்மூலம் நேரத்தை மிச்சப்படுத்த...?!!!?"

  1. ANBUTHIL says:
    October 15, 2012 at 8:38 PM

    பயன்படும் பதிவு நன்றி நண்பனுக்கு

  2. திண்டுக்கல் தனபாலன் says:
    October 15, 2012 at 10:32 PM

    சில சந்தேகங்கள் தீர்ந்து விட்டது...

    நன்றி...

Post a Comment

alternative description of the image

பிரபல இடுக்கைகள்