Command Prompt (CMD) ஐப்
பயன்படுத்தும்போது அடிக்கடி Path இனை மாற்றவேண்டிய சந்தர்ப்பம்
ஏற்படும். எனவே CMD ஐப் பயன்படுத்தும்
தேவையுடையோருக்காக Windows 7 இலே சுலபமாகவும் நேரத்தை
மிச்சப்படுத்தக் கூடிய விதமாகவும் Right Click Menu இல் ஓர் மேலதிக வசதியொன்று உள்ளது. இதனை
எவ்வாறு மேற்கொள்ளலாம் என்று இப் பதிவினூடாகப் பார்ப்போம்.
பின்னர்
கீழ் காட்டிய ஒழுங்கில் சென்று Shell என்பதை அடையவும்.
HKEY_CLASSES_ROOT\Directory\shell
இப்போ
படத்தில் காட்டியவாறு Shell என்பதில் வைத்து Right Click செய்து
புதிய Key ஒன்றை உருவாக்கிக் கொள்ளவும்.
இதற்கு “ Command Prompt “ என பெயர்மாற்றம் செய்துகொள்ளவும்.
இப்போ
கீழ் காட்டியவாறு வலது பக்கத்தில் உள்ள Default ஐ Right Click செய்து
Modify என்பதைக் கொடுத்து Value data
என்பதில் “ Command Prompt here“ என்றவாறு கொடுக்கவும்.
இப்போ
மீண்டும் Command Prompt என்பதில் வைத்து புதிய Key ஒன்றை
உருவாக்கிக் கொள்ளவும். இதற்கு “
Command “ என பெயர்மாற்றம் செய்துகொள்ளவும்.
இப்போ மீண்டும் அதேபோல் கீழ் காட்டியவாறு
வலது பக்கத்தில் உள்ள Default ஐ Right Click செய்து
Modify என்பதைக் கொடுத்து Value data
என்பதில் “ cmd.exe /k cd %1 “ என்றவாறு கொடுக்கவும்.
இப்போ Registry Editor ஐ Close பண்ணியபின்னர் ஏதாவது Folder இன்
மேல் வைத்து Right Click செய்யவும். “ Command Prompt here“ என்ற பதம் காணப்படும்.
பின்னர்
அதனை தெரிவுசெய்யும்போது அந்த Folder இற்குரிய Path உடன் CMD திறக்கப்பட்டிருக்கும்.
இனியென்ன
Path Setting நேரமும் மிச்சந்தான்...........
October 15, 2012 at 8:38 PM
பயன்படும் பதிவு நன்றி நண்பனுக்கு
October 15, 2012 at 10:32 PM
சில சந்தேகங்கள் தீர்ந்து விட்டது...
நன்றி...