.

Windows 8 இல் System Recovery Drive ஐத் தயாரிக்க.


கணணியில் ஏற்படும் திடீர் பிரச்சனைகள் அல்லது மாற்றங்களினால் கணணி தொழிற்பட மறுக்கும் வேளையிலேயே System Recovery செய்வதன் பயன் எமக்கு புரியும். System Recovery செய்வதன் மூலம்  கணணி தொழிற்பட மறுக்கும் வேளைக்கு முன்னர் Restore செய்வதன் மூலம் மீண்டும் கணணியை நாம் இயங்க வைக்க முடியும். இதனை எவ்வாறு மேற்கொள்வதென்று இப்பதிவினூடாகப் பார்ப்போம்.

விண்டோஸ் கீ உடன் i ஐ (Windows Key + I ) அழுத்தி தோன்றும் விண்டோவில் கீழ் காட்டியவாறு உள்ள search box இல் “recovery drive” என type செய்து enter செய்யும்போது காட்டியவாறு கீழ் தோன்றும் Setting என்பதை கிளிக் பண்ணவும். இப்போ இடப்பக்கத்தில் உள்ள “Create a recovery drive” என்பதை கிளிக் பண்ணவும்.



அல்லது,

கீழ் காட்டியவாறு உள்ளதை Ctrl+R ஐ அழுத்தி தோன்றும் RUN என்ற விண்டோவில் paste பண்ணி Enter பண்ணவும்.

control /name Microsoft.Recovery

இப்போ உங்களுக்கு கீழ் காட்டியவாறு தோன்றும் விண்டோவில் உள்ள “Create a recovery drive” என்பதை கிளிக் பண்ணவும்.



இப்போ கீழ் காட்டியவாறு விண்டோ தோன்றும். இதிலே NEXT என்ற பொத்தானை அழுத்த முன்னர் CD அல்லது Pen Drive ஐ பயன்படுத்தத்தக்க விதத்தில் பொருத்தவும்.



இப்போ NEXT ஐ அழுத்தவும். இப்போ உங்கள் Pen Drive இல் ஏதும் ஆவணங்கள் இருப்பின் அழிக்கப்பட்டுவிடும் என்ற எச்சரிக்கை தோன்றும். Create என்பதை அழுத்தவும்.



இப்போ உங்கள் Windows 8 இல் System Recovery Drive ஆனது தயாரிக்கப்பட்டு விடும். Finished என்பதைக் கொடுக்க வேண்டியதுதான்.....


1 Response to "Windows 8 இல் System Recovery Drive ஐத் தயாரிக்க."

  1. Mathivanan says:
    July 22, 2013 at 4:29 AM

    Basic but useful info...

Post a Comment

alternative description of the image

பிரபல இடுக்கைகள்