.

Picture Folder இல் உள்ள படங்கள் Thumbnails இல் பார்க்கமுடியவில்லையா?


உங்கள் படங்கள் உள்ள Folder அல்லது Picture Library போன்றவற்றில் உள்ள படங்களை Thumbnails இல் சாதாரணமாகப் பார்க்க முடியவில்லையா? படங்களைப் பார்க்கவேண்டுமெனில் ஒவ்வொரு படமாக திறந்தே பார்க்கவேண்டி உள்ளதா? இதனால் உங்களுக்கு சிரமமும் எரிச்சல் கூட தோன்றியதா? எனக்கு கூட இதே பிரச்சனை ஏற்பட்டது. இதற்கான தீர்வை இப் பதிவினூடாக தங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.

இப் பிரச்சனை உள்ளபோது நீங்கள் படங்கள் உள்ள Folder இனுள் செல்லும்போது கீழ் காட்டியவாறு படங்களைப் பார்க்கமுடியாமலிருக்கும்.




Windows XP, Windows Vista, Windows 7 போன்ற அனைத்திலும் Folder Option மூலமே இதனை தீர்க்க முடியும். ஆனால் செய்முறை சற்று வித்தியாசமானது.


Windows 7
இப்போ படங்கள் உள்ள  Folder ஐத் திறக்கும்போது மேல் உள்ள படத்தில் காட்டியவாறு தோன்றும்.

இப்போ நீங்கள் கீழ் காட்டியவாறு Organize என்பதை கிளிக் பண்ணி தோன்றும் நிரலில் உள்ள Folder and search options என்பதை கிளிக் செய்யவும்.



இப்போ உங்களுக்கு Folder Options ஆனது தோன்றும். இதிலே கீழ் காட்டியவாறு View என்ற Tab ஐ கிளிக் பண்ணவும். இப்போ கீழ் சிவப்பு வட்டத்தால் காட்டப்பட்டதை தெரிவுசெய்திருப்பதை நீக்கிவிடவும்.
பின்னர் Apply என்பதைக் கொடுத்து பின்னர் OK பண்ணிவிட வேண்டியதுதான்.



இப்போ உங்களுக்கு கீழ் உள்ளவாறு படங்களை Thumbnails இல் பார்க்கக் கூடியதாக இருக்கும்.



Windows XP
My Computer இனுள் செல்லவும்.
இப்போ மேலே Menu இல் Tools என்பதைக் கிளிக் பண்ணவும்.
இதிலே Folder Options என்பதை தெரிவு செய்யவும்.
பின்னர் மேல் காட்டிய ஒழுங்கைப் பின்பற்றவும்.


1 Response to "Picture Folder இல் உள்ள படங்கள் Thumbnails இல் பார்க்கமுடியவில்லையா?"

  1. Anonymous Says:
    February 11, 2013 at 1:43 PM

    hi friends
    I Want to save thi information so what i want to do?
    but i can not save PDF formet & Copy and past tha word document
    So please
    tel me
    how can save?

Post a Comment

alternative description of the image

பிரபல இடுக்கைகள்