கடந்த அலசல்கள்1000 இன் பதிப்பிலே மின்னஞ்சலூடு(E-Mail) ஒலிச்செய்தி(Voice Mail) எவ்வாறு அனுப்புவதென்று பார்த்தோம். இப்பதிப்பில் ஜிமெயிலில்(GMail) இருந்து எவ்வாறு கனடா போன்ற சில நாடுகளுக்கு இலவசமாக அழைப்புக்களை மேற்கொள்வது என்பது பற்றி பார்ப்போம். பொதுவாக அநேகமானோருக்கு இது பற்றி தெரிந்திருந்தாலும் புதியவர்களுக்காக இப்பதிவை பகிர்கின்றேன்.
முதலில் நீங்கள் உங்கள் ஜிமெயில் கணக்கினுள் நுழைந்து கொள்ளுங்கள். இப்போ உங்களுக்கு தோன்றும் கணக்கின் முகப்பு பக்கத்தின் இடப்பக்கத்தில் சட்(CHAT) என்பதற்கு கீழே “Call Phone” எனும் பகுதி உள்ளது. விளக்கத்துக்கு கீழ் உள்ள படத்தை பார்க்கவும்.
அதனை கிளிக் செய்யவும். இப்போ கீழ் உள்ளவாறான பகுதியானது ஜிமெயிலின் வலதுபக்க கீழ் மூலையில் தோன்றியிருக்கும்.
இதிலே சிவப்பு வட்டமிடப்பட்டு காட்டப்பட்டத்தில் எந்நாட்டுக்கு அழைப்பை ஏற்படுத்தப் போறீர்களோ அந்த நாட்டை தெரிவு செய்யவும். (முக்கியமாக கவனிக்கவேண்டியது: பச்சை வட்டத்தால் காட்டப்பட்ட பணத்தின் பெறுமதியானது பூச்சியமாக இருக்கும் நாடுகளுக்கு மட்டுமே இலவசமாக அழைப்பை மேற்கொள்ளலாம். மற்றைய நாடுகளுக்கு அழைப்பை ஏற்படுத்தும்போது அழைப்பின் ஒலி கேட்குமே தவிர அழைப்பை மேற்கொள்ள முடியாது.) பின்னர் அருகேயுள்ள இடைவெளியில் அழைக்கவேண்டிய தொலைபேசி இலக்கத்தை அழுத்தி “Call” என்பதைக் கொடுக்கவேண்டியதுதான்.
முதன்முதலில் இதனைப் பயன்படுத்தும்போது கீழ் உள்ளவாறான செய்தியொன்று தோன்றும். இதற்கு நீங்கள் “Accept” என்பதை கிளிக் பண்ணினால் போதும்.
கடிகாரம் போலுள்ளதை கிளிக் பண்ணி நாம் ஏற்கனவே அழைத்த தகவல்களை (Call History) அறிந்துகொள்ளலாம்.
நாம் அழைக்கும் இலக்கங்களை விரும்பிய பெயரில் சேமித்து வைக்கவேண்டுமானால் மேலுள்ள படத்தில் “Save” என்பதை கிளிக் பண்ணியதும் கீழ் உள்ளவாறான விண்டோ தோன்றும். அதில் விரும்பிய பெயர்களை கொடுத்து “Create New Contact” என்பதை அழுத்தினால் போதும்.
February 24, 2011 at 10:10 AM
only free America And Canada calls
(hand phones , landphones totaly free)
March 8, 2011 at 10:59 AM
but the call button appear only on sometimes in my gmail. How to make it permanently appear?