வலைப்பூவின் Side Bar இல் உள்ள படங்களுக்கு இணைப்புக் கொடுத்தல்.

Side Bar இல் உள்ள அனிமேஷன்(Animation) போட்டோக்களுக்கு எவ்வாறு இணைப்பு(Link) கொடுப்பது என்பதே இப்பதிவாகும். இது பற்றி பலரும் அறிந்திருந்தாலும் கூட நான் அறிந்த இவ்விடையத்தை வலைப்பூவுக்கு புதியவர்கள் சிலரின் வேண்டுகோளிற்கு அமைய பதிவிடுகின்றேன். தங்கள் தளத்தில் சரியாகப் பொருத்தியபின் பிடித்திருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

இதற்கு முதலில் போட்டோஷாப்(PhotoShop) இல் 216pixels X 65pixels  எனும் அளவில் இணைப்பு கொடுக்கவேண்டிய தளத்துக்குரிய லோகோவைப்(Logo) பயன்படுத்தி விளம்பரப்பலகை(Banar) ஒன்றினை செய்துகொள்ளுங்கள்.
பின்னர் அதனை இணையத்தளத்தில் பதிவேற்றி(Upload) விரும்பினால் அனிமேஷன் படமாக மாற்றிக்கொள்ளுங்கள். பின்னர் இவ் “.gif” File இற்குரிய “Direct HTML Link” ஐ அத் தளத்திலிருந்து Copy செய்துகொள்ளவும்.

பின்னர் உங்கள் Blogger Account இனுள் நுழைந்து அங்கு Design à Page Element இல் HTML/ Java  Script  எனும் ஒரு புதிய  Gadget ஐ திறந்துகொள்ளுங்கள்.

அங்கு கீழுள்ள கோடிங்கை COPY செய்து PASTE செய்யுங்கள்.

இதில் உங்களுக்குத் தேவையான அளவு விளம்பரப் பலகைகளைச் சேர்த்துக்கொள்ளலாம்.
இங்கு
என்பதை தேவைக்கேற்ப கொடுத்து ஒவ்வொரு விளம்பரப் பலகைக்கும் இடையிலான இடைவெளியை நாம் மாற்றிக்கொள்ளலாம்.

இதில் “WEB PAGE LINK” என்ற இடத்தில் இணைப்புக் கொடுக்கவேண்டிய தளத்திற்குரிய URL ஐயும்,
DIRECT HTML LINK” என்ற இடத்தில் அவ் விளம்பரப் பலகைக்குரிய பதிவேற்றிய தளத்திலிருந்து நேரடி இணைப்பையும் கொடுக்கவும். உதவிக்கு கீழே உள்ள படத்தைப் பார்க்கவும்.

சந்தேகமிருப்பின் தவறாது கேட்கவும். முடியுமானவரை தீர்த்துவைக்கின்றேன். இதுபோன்ற மேலும் பல விடையங்கள் தெரிந்திருப்பின் பின்னூட்டம் மூலம் தெரியப்படுத்தினால் புதியவர்களின் அலசுகைக்கு பேருதவியாக இருக்குமென நம்புகின்றேன்.

3 Response to "வலைப்பூவின் Side Bar இல் உள்ள படங்களுக்கு இணைப்புக் கொடுத்தல்."

1. ம.தி.சுதா says:
February 12, 2011 at 11:43 AM

நன்றி ஒரு உதவி தேவை gif படம் ஒன்றை எமக்குத் தேவையான வாசகங்களுடன் செய்யக் கூடிய தளம் ஏதாவது இருக்கிறதா..

2. ம.தி.சுதா says:
February 12, 2011 at 11:45 AM

பதிலுக்காய் காத்திருக்கிறேன்..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
என் சிங்கக்குட்டி சீறி வந்த நாளும் என் மீள் வருகையும்.

3. alasalkal1000 says:
February 13, 2011 at 12:36 PM

இதுவரை எனது வலைப்பூவின் பக்கச் சுவரில் கொடுக்கப்பட்ட ".gif" படங்கள் எல்லாம் நான் போட்டோஷோப்பில் ".jpg" ஆக செய்யப்பட்ட பின்னர் தரவேற்றி ".gif" படமாக மாற்றப் பட்டவையே. இதற்கான தளம் "http://imageshack.us/" ஆகும். ஆனால் நீங்கள் குறிப்பிடும் தளம் பற்றி இதுவரை நான் முயற்சிக்கவில்லை. அதுபற்றி அலசிப் பார்த்தபின் பதிலளிக்கின்றேன். நண்பர்கள் எவரேனும் இதுபற்றி அறிந்திருப்பின் பின்னூட்டம் மூலம் பகிர்ந்துகொள்ளலாம்.

Post a Comment

alternative description of the image

பிரபல இடுக்கைகள்