நாங்கள் வழமையாக நண்பர்களுக்கு மின்னஞ்சலானது(E-Mail) அனுப்பும்போது எழுத்து வடிவிலேயே(Text Format) செய்தியை அனுப்புவதுண்டு. இதனால் அலுவலகத் தேவையுடையோர் தவிர ஏனைய பெரும்பாலானோர் மெயில்(Mail) அனுப்புவதில் அக்கறை கொள்வதில்லை. ஏனெனில் நினைக்கும் தகவல்கள் யாவற்றையும் முதலில் டைப்(Type) செய்யவேண்டும். அதிலும் பிரச்சனை ஆங்கிலத்தில் டைப் செய்வது. வசனப் பிழைகள் வருமென்ற அச்சம்.
ஆனால் தொலைபேசியில் அனுப்புவதுபோன்று மின்னஞ்சலிலும் ஒலிச் செய்தியை(Voice Mail) நண்பர்களுக்கு அனுப்பினால் எப்படியிருக்கும் என சிலசமயம் எண்ணியிருக்கலாம். இதனால் நேரமும் மிச்சமே.... உங்கள் எண்ணத்துக்கு பரிகாரமாகவே இவ் இடுக்கை அமைகின்றது.
நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு அனுப்பவேண்டிய செய்தியை உங்கள் குரலில் பதிவு செய்து அனுப்ப வேண்டுமா?
இதற்கு நீங்கள் முதலில் கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்து அத் தளத்திற்கு செல்லுங்கள்...
இப்போ கீழ் காட்டியவாறு அத் தளத்தின் முகப்பு காணப்படும். இங்கு சிவப்பு வட்டமிடப்பட்டு காட்டப்பட்ட “Click to Record” என்பதை கிளிக் பண்ணியபின் உங்கள் குரல் ஒலியை பதிவு செய்யவும். உங்கள் செய்தியைத் தெரிவித்து முடிந்ததும் “Stop” என்பதை கிளிக் பண்ணவும்.
இப்போ கீழ் உள்ளவாறான பக்கம் தோன்றும்.
இதில் பச்சை வட்டத்தால் காட்டப்பட்ட “Listen” என்பதைக் கிளிக் பண்ணி நீங்கள் பதிவுசெய்த செய்தி சரியா என்பதை உறுதிப் படுத்திக் கொள்ளலாம். மாற்றவேண்டுமெனத் தோன்றின் சிவப்பு வட்டத்தால் காட்டப்பட்ட “Record Again” என்பதை கிளிக் பண்ணி மீண்டும் பதிவு செய்துகொள்ளலாம்.
மின்னஞ்சல் மூலமாக நண்பர்களுக்கு அனுப்பவேண்டின் நீல வட்டத்தால் காட்டப்பட்ட “Send to a Friend” என்பதையும்; உங்கள் வலைத்தளம் மூலமாக அனுப்பவேண்டின் மண்ணிற வட்டத்தால் காட்டப்பட்ட “Post on the Internet” என்பதையும் தெரிவு செய்யலாம். நீங்கள் “Send to a Friend” என்பதை தெரிவுசெய்திருப்பின் கீழுள்ள பக்கம் தோன்றும்.
இதில் “Your email” என்பதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் “Friend’s email(S)” என்பதில் அனுப்பவேண்டிய உங்கள் நண்பர்களின் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்து “Send” என்பதை அழுத்தினால் போதும். உங்கள் ஒலிச் செய்தி அவர்களுக்கு அனுப்பப்பட்டுவிடும்.
இனி நீங்களும் முயற்சித்துப் பாருங்கள்...
February 6, 2011 at 4:56 PM
ஹாய் !
நல்லாயிருக்கு.
February 7, 2011 at 1:39 PM
Good news, earlier i used voice recorder. Thanks for info.
February 10, 2011 at 4:17 AM
good i will try. Thank you.
vetha.Elangathilakam.
Denmark