All- in -One என்று பொதுவாக ஒன்றிலே பல தொழிற்பாடுகளை செய்யக்கூடிய இலத்திரனியற் சாதனங்களைத்தானே கேள்விப்பட்டோம். இதென்னவென்று கூட யோசிக்கலாம்.
ஆம். பொதுவாக கணனியில் இயங்குதளத்தை நிறுவியபின்னர் எமக்கு தேவைப்படுவது மென்பொருட்கள் அடங்கிய சிடியே. இதனை நாம் கடையிலிருந்தோ அல்லது நண்பர்களிடமிருந்தோ அல்லது அடிக்கடி இயங்குதளத்தை நிறுவுபவர்கள் எனின் சேகரித்தோ கூட வைத்திருக்கலாம். ஆனால் உங்களிடம் அவ்வாறு மென்பொருட்கள் ஏதும் போதியளவு இல்லாதவேளை இயங்குதளத்தை அழித்து மீண்டும் நிறுவவேண்டி ஏற்படும் சந்தர்ப்பத்தில் CD க்காக அலையவேண்டியதில்லை.
உங்கள் தேவையை நிறைவு செய்ய ஒரு தளம் உள்ளது. இவ் இணையத்தளத்தில் எமக்குத் தேவையான அடிப்படையான மென்பொருட்கள் அனைத்தும் உள்ளது. அங்கு நீங்கள் சென்று எந்தெந்த மென்பொருட்கள் தேவையோ அவற்றை தெரிவு செய்யவேண்டியதுதான்.
தெரிவு செய்தபின்னர் கீழே உள்ள 'Get Installer' என்ற பட்டனை கிளிக் செய்து நீங்கள் தேர்ந்தெடுத்தவற்றை நிறுவும் மென்பொருளை[All- in -One Software] தரவிறக்கி கொள்ளுங்கள்.
இப்போது தரவிறக்கிக் கொண்ட அந்த மென்பொருளை இயக்கினால் நீங்கள் தேர்ந்தெடுத்த அனைத்து மென்பொருள்களும் தானாக தரவிறக்க பட்டு உங்களிடம் எவ்வித கேள்வியும் கேட்காமல் கணினியில் நிறுவப்பட்டு விடும்.
February 27, 2011 at 7:20 AM
missing LINK
February 27, 2011 at 10:28 AM
useful software
February 27, 2011 at 2:55 PM
Ok! Thank You for your information.
Now I attached that Link.
October 20, 2012 at 1:23 PM
இணைய இணைப்பு இல்லாமல் பயன்படுத்தக் கூடிய மென்பொருள் தொகுப்பு ஏதாவது இருந்தால் கூறவும் நண்பரே!