கடந்தவொரு பதிப்பிலே “ MS Word இன் Shortcuts களை Print வடிவில் இலகுவாகப்எவ்வாறு பெறலாம்” என்று அலசியிருந்தோம். இப்போ Photoshop பயன்படுத்துபவர்கள் தமக்குத் தேவையான Shortcuts களை எவ்வாறு இலகுவாகப் பெற்றுக்கொள்ளலாம் என்று இப்பதிவினூடாகப் பார்ப்போம்.
இதற்கு முதலில் Photoshop ஐ திறந்துகொள்ளுங்கள். இப்போ கீழ் காட்டியவாறு Edit என்பதனை கிளிக் செய்து அங்கு Keyboard Shortcuts என்பதனுள் செல்லுங்கள். அல்லது Ctrl +Shift +Alt உடன் K ஐக் கொடுத்து திறந்து கொள்ளுங்கள்.
இப்போ உங்களுக்கு கீழ் உள்ளவாறான விண்டோ தோன்றும்.
இதிலே “ Shortcuts For: “ என்பதில் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் தேவையானதைத் தெரிவுசெய்து அதற்குரிய Shortcuts களை கீழ் உள்ள நிரலில் கிளிக் செய்வதன் மூலம் அறிந்துகொள்ளலாம். அதனை ஒரேமுறையில் பார்வையிட வேண்டுமெனில் வலப்பக்கத்தில் உள்ள “ Summarize “ என்பதைக் கிளிக் செய்யவும். இப்போ உங்களுக்கு Save செய்வதற்கான விண்டோ ஒன்று தோன்றும். இதனை வேண்டிய இடத்தில் “ .html “ வடிவில் சேமித்துகொள்ளலாம்.
இங்கு நீங்கள் உங்களுக்கு விரும்பிய Shortcuts களை கொடுக்கவேண்டுமெனில் மேலே காட்டப்பட்ட விண்டோவிலே உள்ள Shortcuts களின்மேல் கிளிக்செய்து மாற்றியபின் சேமித்துக் கொள்ளவேண்டியதுதான்.
August 4, 2012 at 7:57 AM
விளக்கமான பதிவு... நன்றி...
சின்ன வேண்டுகோள் : தளத்தை கொஞ்சம் மேம்படுத்தலாமே... (All Side widgets)