.

கணனியில் Health Report ஐ பார்வையிட...


நமது கணனியில் உள்ள அனைத்து விதமான வன்பொருட்கள் மற்றும் பிற சாதனங்கள் பற்றிய Health Report  இனை மிகவும் விபரமாக அறிய விரும்புகின்றீர்களா?

இதற்காக வெளியிலிருந்து எதுவித மென்பொருட்களையும் தரவிறக்கி நிறுவவேண்டிய அவசியமில்லை.  இதற்காக நீங்கள் செய்யவேண்டியது இதுதான்,

முதலில் நீங்கள் உங்கள் Start Button ஐ கிளிக் செய்து Start Menu விலுள்ள Start Search எனுமிடத்தில் “performance and information” என்பதைக் கொடுத்து Enter செய்யவும்.இப்போ கீழ் உள்ளவாறான விண்டோ தோன்றும்.

 

இதிலே இடதுபக்கத்தில் காட்டப்பட்ட Advanced Tools என்பதை கிளிக் செய்யவும். இப்போ கீழ் உள்ளவாறான விண்டோ தோன்றும். இதிலே கடைசியாக அடையாளமிடப்பட்டு காட்டப்பட்ட “Generate a System Health Report” என்பதை தெரிவுசெய்யவும்.

 

இப்போ கீழ் உள்ளவாறு விண்டோ தோன்றி தகவல் சேகரிப்புக்காக சில நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும்.


அதன்பின்னர் கீழ் காட்டியவாறு எமக்கு தேவையான  Health Report ஆனது தோன்றும். அதிலே வட்டமிடப்பட்டுக் காட்டப்பட்ட இடத்தில் உள்ள பகுதியை நீட்டுவதன்மூலம் முழு விபரங்களையும் அறிந்துகொள்ளலாம்.


0 Response to "கணனியில் Health Report ஐ பார்வையிட..."

Post a Comment

பிரபல இடுக்கைகள்